Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பிரம்படி + சிறை.. கழிவறையில் பாலியல் தொல்லை.. சிங்கப்பூரில் இந்திய நர்ஸ்க்கு என்ன தண்டனை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த 34 வயது நிரம்பியவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். அவர் மருத்துவமனைக்கு வந்த நபருக்கு கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திய நர்ஸ்க்கு 14 மாதம் சிறை தண்டனையுடன், 2 பிரம்படியை தண்டனையாக வழங்கி உள்ள நிலையில் வழக்கின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல வெளிநாடுகளுக்கும் ஆண்களும், பெண்களும் நர்ஸ் பணி செய்து வருகின்றனர். நம் நாட்டை ஒப்பிடும்போது நர்ஸ் பணிக்கு அதிக சம்பளம் வழங்குவதால் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.

singapore nurse sexually harassment

சிங்கப்பூரிலும் ஏராளமான இந்தியர்கள் நர்ஸாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் ராஃபிள்ஸ் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இந்தியாவை சேர்ந்த எலிப் சிவ நாகு (வயது 34) என்பவர் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் 18 ம் தேதி முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அந்த முதியவரை பார்க்க அவரது பேரன் மருத்துவமனைக்கு வந்தார். அதன்பிறகு இரவு 7.30 மணியளவில் நோயாளி பயன்படுத்தும் கழிவறையை அந்த நபர் பயன்படுத்த சென்றார்.

அப்போது அங்கிருந்த நர்ஸ் எலிப் சிவ நாகு, அந்த நபருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதாவது அந்த நபர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாத்தாவை பார்த்து நலம் விசாரித்த நிலையில் அவரது உடலில் கிருமிகள் தொற்றி இருக்கலாம். இதனால் கிருமி நீக்கம் செய்வதாக கூறி எலிப் சிவ நாகு தனது கையில் சோப்பை எடுத்து அந்த நபருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மருத்துவமனை என்பதால் அந்த நபர் உடனடியாக எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. அதன்பிறகு சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். ஜூன் 23ம் தேதி எலிப் சிவ நாகுவை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தியாவை சேர்ந்த நர்ஸ் எலிப் சிவ நாகுவிற்கு ஓராண்டு 2 மாதம் என மொத்தம் 14 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியது. அதுமட்டுமின்றி குற்றத்துக்காக 2 பிரம்படியையும் தண்டனையாக வழங்கியது.

சிங்கப்பூரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தண்டனை பெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் தண்டனை பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த அங்கித் சர்மா என்ற 46 வயது நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. சாங்கி சிட்டி பாயிண்ட் மாலில் நர்சிங் ரூமில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவர் கைதான நிலையில் கடந்த மாதம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+