சிங்கப்பூர் தமிழ் மொழி விழா- ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நகைச்சுவை அரங்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழா 2021ன் ஓர் அங்கமாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), நகைச்சுவை அரங்கம் ஒன்றை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது.

"தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!" எனும் பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி அனுமிதா முரளி பாடிய தமிழ் வாழ்த்துப் பாடலுடன் துவங்கியது. சங்கத்தின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் வழங்கிய தலைமையுரையில், "தமிழ் மொழியை நம் விழி போல காக்க வேண்டும் என்றும், கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை 103 நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாகச் செய்து முடித்து சாதனைப் படைத்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

இளையர்களை தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியின் "மாணவர் அங்கம்" பகுதியில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் முஹம்மது மாதிஹ், "தமிழை நேசிப்போம்" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். பொதுக்கல்வி உயர்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மத்ரஸா அல்ஜூனைட் அல்-இஸ்லாமியா மாணவர் அஃபீப் முஹம்மது ரையான் மற்றும் மேல்நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற இராபிள்ஸ் கல்வி நிலையம் மாணவர் நாகூர் கனி முஹம்மது ஃபைஸ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. மனோகரன் சுப்பையா வழங்கிய வாழ்த்துரையைத் தொடர்ந்து, முனைவர் மு. அ. காதர் இயற்றி, இசை மணி பரசு கல்யாண் இசையமைத்து 18 சிங்கப்பூர் வாழ் பாடகர்கள் முதன்முறையாக இணைந்துப் பாடிய "தமிழை நேசிப்போம்" பாடலின் காணொளி இடம்பெற்று நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.


தமிழகத்திலிருந்து சிறப்புப் பேச்சாளராக இணையம் வழி கலந்துகொண்ட தொலைக்காட்சிப் புகழ், பட்டிமன்றப் பேச்சாளர், "நகைச்சுவை நாவலர்" செ. மோகன சுந்தரம், தமிழ்ச் சுவையும் நகைச்சுவையும் கலந்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் அப்துல் சுபஹான் தமிழ் மணம் கமழ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும், இளையர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்ட இந்த "நகைச்சுவை அரங்கம்" சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் நடந்தேறியது.


-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications