’4ஜி’ மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான பயணம்..வோங் காலத்தில் ஓங்குமா சிங்கப்பூர்! நாடே எதிர்பார்க்குதே!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையில் அந்நாட்டின் 4வது பிரதமராக லாரன்ஸ் வோங் இன்று பதவியேற்றார். இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பதவியிலிருந்து லீ சியன் லூங் விலகி தனது பொறுப்புகளை துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைத்தார்.

நவீன சிங்கப்பூரின் தந்தையான லீ குவானுக்கு பிறகு குறிப்பிடத்தக்க தலைவராக இருந்த சிங்கப்பூரின் 3வது பிரதமரான லீ சியான் லூங் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ அடுத்த மாதம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Lawrence Wong will sworn in as the 4th Prime Minister of Singapore today

இன்று அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகும் நிலையில், துணை பிரதமரான லாரன்ஸ் வாங் அடுத்த புதிய பிரதமராக பதவியேற்று கொண்டார். அதிபர் தர்மன் சண்முகரத்னம், திரு வோங்கை பிரதமராக அதிகாரபூர்வமாக அறிவித்து, நியமனக் கடிதத்தை அவரிடம் அளித்தார்.

அதன்பிறகு சிங்கப்பூரின் 4ஜி எனப்படும் லாரன்ஸ் மற்றும் நான்காவது தலைமுறை அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. இஸ்தானாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வாங் பதவி ஏற்றார். பிரதமர் பொறுப்புடன் நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடன் துணை பிரதமராக கான் கிம் யோம் உள்ளிட்ட புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றது. ஏற்கனவே துணை பிரதமராக இருக்கும் ஹெங்க் ஸ்வீ கீட் (Heng Swee Keat ) அதே பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் நாடே ஆவலுடன் அந்த தருணத்தை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் பொறுப்பை லாரன்ஸிடம் லீ சியான் லூங் ஒப்படைப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டபோது, சிங்கப்பூர் மற்றும் அதன் 5.9 மில்லியன் மக்கள் மீதான பொறுப்பை "தாழ்மை மற்றும் ஆழ்ந்த கடமை உணர்வுடன்" ஏற்றுக்கொண்டதாக வோங் கூறினார். "எனது ஒவ்வொரு அணுவின் சக்தியும் நம் நாட்டிற்கும் நமது மக்களுக்கும் சேவை செய்ய அர்ப்பணிக்கப்படும்" என்று வோங் வீடியோவை வெளியிட்டு பேசியிருந்தார்.

லாரன்ஸ் வோங் கடந்த 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் பணிக்குழுவின் இணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அரசியல் தலைமைக்கு உயர்ந்துள்ளார். தொடர்ச்சியான ஆலோசனைகளுக்குப் பிறகு ஏப்ரல் 2022-ல் லீயின் வாரிசாக வோங் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து துணைப் பிரதமராக பதவி உயர்வு பெற்ற அவர், சிங்கப்பூரின் நிலைத்தன்மை, சமத்துவமின்மை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலம் போல செயல்பட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஒரு பெரிய மாற்றத்தை சிங்கப்பூர் சந்திக்கும் என கூறும் வோங், வோங் திங்களன்று அமைச்சரவை மறுசீரமைப்பைச் செய்தார். வர்த்தக அமைச்சராக இருந்த கிம் யோமை துணை பிரதமராக நியமனம் செய்தார். இதனிடையே வோங் பதவியேற்பு குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் பிரீதம் சிங், நிச்சயமற்ற மற்றும் கணிக்க முடியாத வெளிப்புற சூழல் மற்றும் உள்நாட்டு முன்னணியில் குறிப்பிடத்தக்க தலைமுறை மாற்றங்களுடன் சவாலான நேரத்தில் வோங் பொறுப்பேற்கிறார் எனவும், பிரதமர் வோங்கின் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களின் நலன்களை முன்னேற்றுவதற்கு தொழிலாளர் கட்சி தங்கள் பங்கை தொடர்ந்து ஆற்றும்" சிங் கூறினார்..

மே 1 அன்று தனது பிரதமராக தனது உரையாற்றிய லீ, மக்களை வோங்கின் பின்னால் அணிதிரளுமாறு வலியுறுத்தியதோடும், சிங்கப்பூரின் நிலையான அரசியல் நீண்டகாலத் திட்டமிடலுக்காகவே இந்த முடிவு எனவும், எனது வாரிசுக்கு சிங்கப்பூரை நல்ல முறையில் ஒப்படைக்க நான் தயாராகும் போது, நான் திருப்தியாகவும், முழுமையையும் உணர்கிறேன்," என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+