கடலுக்கடியில் மர்மப் பொருள்.. பதற வைத்த 4 மணி நேரம்.. கடலில் மூழ்கிய மலேசிய கப்பல்..
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அருகே மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான கேடி பென்டேகர் கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். கப்பலில் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு மீட்புக் குழுவினர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து, கடலுக்குள் கப்பல் மெது மெதுவாக மூழ்க ஆரம்பித்தது.

மலேசிய கடற்படைக்குச் சொந்தமானது கே.டி. பென்டேகர் என்ற கடற்படைக் கப்பல். இந்தக் கப்பல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்டு கடற்படைக்கு 1978 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு முதல் இந்தக் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. கே.டி.பென்டேகர் கப்பல் 45 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் அருகே தென்ஜூங் பெனுயுசிப் பகுதியில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் கே.டி. பென்டேகர் கப்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கடலுக்கடியில் ஏதோ ஒரு மர்மப் பொருள் இடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், சேதமடைந்த கப்பலுக்குள் நீர் புக ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக கடற்படை தலைமைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். கப்பலில் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு மீட்புக் குழுவினர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து, கடலுக்குள் கப்பல் மெது மெதுவாக மூழ்க ஆரம்பித்தது.
கப்பல் முழுவதுமாக மூழ்குவதற்குள் கப்பலில் இருந்த 39 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, 4 மணி நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது. கப்பல் மூழ்கியதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, கே.டி.பென்டேகர் கப்பலைக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த கப்பல் விபத்து குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கடற்படை கேட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.54 மணிக்கு கப்பல் மூழ்கியுள்ளதாகவும், கப்பல் கடலில் மூழ்கியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், யாரும் அச்சப்படத் தேவையில் என்றும் கடற்படை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications