செமிகண்டக்டர் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. சிங்கப்பூரில் மோடி தலைமையில் கையெழுத்தானது!
சிங்கப்பூர்: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று செமிகண்டக்டர் துறையில் மனித வள திறன் சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மோடி தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் புருனே நாட்டை சென்றடைந்தார். புருனே நாடு கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டிஷ் இடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா, புருனே இடையே தூதரக உறவு நீடிக்கிறது. இருதரப்பு உறவு 40 ஆண்டுகளை கடந்த போதிலும், இதுவரை இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் புருனேவுக்கு சென்றதில்லை.

அந்த வகையில், புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் என்பதால் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. புருனே பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹ்ததீ பில்லா, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு சென்றதும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "நமது இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக, வணிக, கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆவலுடன் உள்ளேன்" என பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கும் ஓட்டலுக்கு வந்த இந்திய வம்சாவளியினர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாலையில், இந்திய தூதரகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் தற்போது சிங்கப்பூருக்கு பயணித்திருக்கிறார்.
மோடி தனது பதவிக் காலத்தில் 5வது முறையாக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது செமிகண்டக்டர் துறையில் மனித வள திறன் சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் கையெழுத்தாகியுள்ளது.
ஒரு காலத்தில் அமெரிக்காவில் மட்டும் இருந்த செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள், இன்று உலகம் முழுவதும் உற்பத்தி மையத்தை அமைத்து வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூரில் அதிக அளவில் இந்த உற்பத்தி மையங்கள் இயங்கி வருகின்றன. உற்பத்திக்கான இடம் மற்றும் உற்பத்தி சக்தி என அனைத்தும், சிங்கப்பூரில் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இந்த துறையில் இந்த நாடு மாஸ் காட்டி வருகிறது.
சிங்கப்பூரை விட இந்தியாவில், உற்பத்தி சக்தி அதிகம். எனவே, இந்த துறை சார்ந்த நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வர, பிரதமர் பயணம் உதவும் என்று சொல்லப்படுகிறது.
கம்ப்யூட்டிங், எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமோட்டிவ், விண்வெளி, LED விளக்குகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), 5G தொலைத்தொடர்பு, கேமிங் கன்சோல்கள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், தொலைநோக்கிகள் போன்ற அறிவியல் கருவிகள் ஆகியவற்றில் செமிகண்டக்டரின் பயன்பாடுகள் இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே செமிகண்டக்டர் உற்பத்தியை அதிக அளவில் கையில் எடுக்க வேண்டிய நேரம் இந்தியாவுக்கு நெருங்கிவிட்டது. அந்த வகையில் பிரதமரின் சிங்கப்பூர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications