சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உணர்ச்சியும் கவர்ச்சியும்தான் இருக்கு.. தமிழக அரசியலில் வளர்ச்சி இல்லையே.. கார்த்தி சிதம்பரம் பரபர

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் எப்போதும் தனது மனத்திற்குப் படும் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர்.

அப்படி அவர் சொல்லும் கருத்துகள் சில நேரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும். அப்படியொரு கருத்தைத் தான் கார்த்தி சிதம்பரம் இப்போது கூறியுள்ளார்.

ஒரே கேள்வி.. ‛‛கோட்சே’’ ரயில் நாக்பூரில் எப்போது கிளம்பும்? மத்திய அரசை சாடிய கார்த்தி சிதம்பரம்! ஒரே கேள்வி.. ‛‛கோட்சே’’ ரயில் நாக்பூரில் எப்போது கிளம்பும்? மத்திய அரசை சாடிய கார்த்தி சிதம்பரம்!

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் எம்பி நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கார்த்தி சிதம்பரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்றைத் தினம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரபர கருத்துகளைத் தெரிவித்தார். பிரதமர் மோடி மதுரைக்கு வந்தால் 95% முடிந்துவிட்டதாக பாஜகவினர் கூறும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

 காங்கிரஸ் தலைமை

காங்கிரஸ் தலைமை

மத்திய அரசுப் பணி தேர்வில் இந்தி திணிப்பைக் கொண்டு வருவதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றான் தாய் மனதுடன் அணுகுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவே வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செல்லும் நிலையில், அதற்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளதாகத் தெரிவித்த கார்த்தி சிதம்பரம், இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வகைகளிலும் பலன் அளிக்கும் என்று தெரிவித்தார்.

 ஆக்கப்பூர்வமான விவாதம் இல்லை

ஆக்கப்பூர்வமான விவாதம் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் விவாதங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவே இல்லை. மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அதை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து எல்லாம் இங்கு விவாதம் நடைபெறுவது இல்லை. கல்வியில் என்ன மாதிரியான சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் என்ற விவாதம் இல்லை.

 வளர்ச்சி இல்லை

வளர்ச்சி இல்லை

மாறாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் எந்த மதம் என்று விவாதித்து வருகின்றனர். இதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை தான். தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. இங்குள்ள அரசியல் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக எனக்குத் தெரியவில்லை.

 மூத்த அமைச்சர்கள் பேச்சு

மூத்த அமைச்சர்கள் பேச்சு

முதல்வர் அவரது உட்கட்சி விவகாரம் குறித்துப் பேசி இருந்தார். அது தொடர்பாக எதையும் சொல்ல விரும்பவில்லை திமுக என்பது முதல்வர் ஸ்டாலினை முழுமையாக ஏற்றுக் கொண்ட இயக்கம். அங்குப் பழுத்த அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அவர்களிடம் சென்று மேடையில் எப்படி பேட வேண்டும் என்று நான் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Congress MP Karti Chidambaram says Tamilnadu politics is around controversy: Karti Chidambaram about DMK MLA's speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X