யாருப்பா மொரட்டு ஆள இருக்க.. சிவகங்கை ரேஷன் கடையில் கண்ட காட்சி.. ஆடிப்போன மக்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சொர்ணநாதன் தெரு பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில், இரண்டு நாள் முன்பு கண்ட காட்சி, பொதுமக்களை ஆடிப்போக வைத்துள்ளது. ரேஷன் கடையில் வேலை செய்து வந்த பணியாளர், வேலை நேரத்தில் மது போதையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். இது பற்றி புகாரின் பேரில் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சொர்ணநாதன் தெரு பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்படுகிறது. இந்த கடையில் நித்தியராஜ் என்ற ஊழியர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி நேரத்தின்போது மதுபோதையில் ரேஷன் கடையில் படுத்து தூங்கினாராம்.

அப்போது ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதுதொடர்பான சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஒரு கட்டத்தில் மாவட்ட உணவு துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சொர்ணநாதன் தெரு பகுதியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் ஊழியர் நித்தியராஜ் அந்த ரேஷன் கடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தநிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அருண் பிரசாத், இதுகுறித்து விசாரணை நடத்தி பணி நேரத்தில் போதையில் இருந்ததாக ரேஷன் கடை ஊழியர் நித்தியராஜை பணியிடை நீக்கம் செய்து தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மது போதை என்பது சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் நிலையில், அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தற்போதைய நிலையில் சர்வ சாதாரணமாக பலர் சாலையோரங்களில் மது அருந்துவது நடக்கிறது. அதேபோல் மது அருந்துவிட்டு வாகனங்களில் பயணிப்பதும் சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவருகிறது. மது அருந்துவோரை ஒரு காலத்தில் மக்கள் ஒதுக்கிவைத்தனர்.
மது அருந்திவிட்டு மாட்டினால் அவமானம் என்ற நிலை இருந்தது. இப்போது அரசு மதுபானக்கடை பார்களில் அதிகாலையிலேயே கள்ளத்தனமாக மதுபானங்களை வாங்கி அருந்தும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. கூலி வேலைக்கு செல்லும் பலரும் மதுபோதைக்கு அடிமையாகி, பணத்தை இழப்பதுடன், உடல் நல ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பத்தனில் ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அந்த குடும்பம் விரைவில் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்களின் வறுமை மற்றும் அவர்களின் பொருளாதார சீர்கேட்டிற்கு மதுப்பழக்கம் முக்கிய காரணமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications