Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை அஜித் குமார் கஸ்டடி மரணம்: பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றம்.. 5 போலீசார் கைது!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தில் 5 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த லாக்கப் மரண வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அடிப்படையில் அஜித் குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Five Police Officers Arrested Over Custodial Death of Youth in Sivaganga

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், காரில் இருந்த நகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக விசாரிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து அஜித்குமார் மரணத்துக்கு காரணமானவர்களாக கூறப்படும் 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 6 போலீசாரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று (ஜூன் 30) இரவு கிடைத்தது. இதன் அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 போலீசார் மீதும் தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி. உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+