சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? கார்த்தி சிதம்பரம் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Google Oneindia Tamil News

சிவகங்கை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருந்தாலும் கூட அரசியல் கட்சிகள் தற்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன. கூட்டணி தொடர்பான பேச்சுகளும் எழுகின்றன.

அதிமுக கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது இருந்தவர்கள் அப்படியே இருப்பார்கள் என தெரிகிறது. ஆனால் இந்த கூட்டணியை ஏற்கெனவே முறித்துக் கொண்ட பாமகவும் தேமுதிகவும் மீண்டும் வருமா என தெரியவில்லை. அது போல் பாஜகவுக்கு சொற்ப சீட்டுகளை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

டெல்லியை கலக்கிய ராகுல் - கமல் கூட்டணி.. “தமிழில் பேசுங்க”.. அவர் வைத்த கோரிக்கை! ஒரே உற்சாகம்! ஆஹா! டெல்லியை கலக்கிய ராகுல் - கமல் கூட்டணி.. “தமிழில் பேசுங்க”.. அவர் வைத்த கோரிக்கை! ஒரே உற்சாகம்! ஆஹா!

நிறைய சீட்டுகள்

நிறைய சீட்டுகள்

ஆனால் அவர்கள் நிறைய சீட்டுகளை எதிர்பார்க்கிறார்கள். எனவே பாஜகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என தெரியவில்லை. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது மக்கள் நீதி மய்யம் இந்த முறை எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பதுதான்!. கடந்த 24 ஆம் தேதி டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அவர் அழைத்ததன் பேரில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

காங்கிரஸுடன் கூட்டணி

காங்கிரஸுடன் கூட்டணி

அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தங்களுக்கு கூட்டணி வைக்கும் கட்சிக்கு தங்களுக்கு திமுக தலைமையால் ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து ஓரிரு இடங்களை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும். அந்த வகையில் திமுக கொடுக்கும் எம்பி தொகுதிகளில் ஓரிரு இடங்களை கமல்ஹாசன் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

 மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்

இந்த நிலையில் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மறுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை யாத்திரை 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதை கொண்டாடும் விதமாக சிவகங்கையில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்த கார்த்திக் சிதம்பரம் எம்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களை நோயாளிகளாக பார்க்க வேண்டும். போதை பொருள் பயன்படுத்துபவர்களைவிட அதை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயன்படுத்துவது நமது கலாச்சாரத்திற்கு புதியது அல்ல.

காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன்

காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம்பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. தமிழக அரசு பொங்கல் பரிசாக செங்கரும்பை தமிழக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியும் செயல்படவில்லை. எய்ம்ஸ் வளாகத்தில் படிக்காமல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டு காலம் படிப்பை முடிப்பவர்களுக்கு எய்ம்ஸில் படித்ததாக சான்றிதழ் வழங்கப்படும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரைக்கு டெல்லி செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
Politics: Sivagangai Congress MP Karthi Chidambaram predicts Kamal Haasan will join in Congress alliance as chances are there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X