பிரிட்டிஷ்காரர்களை ஓட விட்ட உலகின் முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி.. வீரத்தாயின் வரலாறு இதோ!
சிவகங்கை: தெக்கத்திச் சீமை ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டத்தில் முன்நின்றது. சிவகங்கைச் சீமையின் வீரப்பெண்கள் ஆங்கிலேயரைத் தீரமுடன் எதிர்த்துப் போரிட்டவர்கள். அந்தவகையில், ஆங்கிலேயப் படையை அழித்தொழித்த உலகின் முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி. ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கை எரிக்க தன் உயிரையே துச்சமாக உதறியவர் குயிலி. வீரமங்கை வேலுநாச்சியாரின் வலது கரமாகத் திகழ்ந்த குயிலியை பற்றி அறிந்துகொள்வோம்..
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். 1772ல் ஆங்கிலேயர்கள் சிவகங்கையை முற்றுகையிட்டனர். முன்பே வேலு நாச்சியாரின் கணவரும் சிவகங்கையின் அரசருமான முத்து வடுகநாதர் கொல்லப்பட்டிருந்தார். அவருக்குப் பின்னர், இழந்த நாட்டை மீட்டெடுக்க அரசி வேலுநாச்சியார் சபதம் எடுத்தார்.

அந்த காலகட்டத்தில் பெரியமுத்தன் - ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தவர் குயிலி. விளை நிலங்களை நாசம் செய்த காளையை அடக்கப் போய் உயிரை விட்டவர் குயிலியின் தாய் ராக்கு. மனைவியின் இறப்புக்குப் பிறகு முத்துப்பட்டிக்குச் சென்று அங்கிருந்து அரண்மனைக்கு தோல் தைக்கும் வேலைக்குச் சென்றார் பெரியமுத்தன். ராணி வேலுநாச்சியாரின் வீரதீர பராக்கிரமங்களை நாள்தோறும் தன் மகள் குயிலிக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தார் பெரியமுத்தன்.
வேலுநாச்சியார் பற்றிய வீரக் கதைகளைக் கேட்டு, அவரைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தார் குயிலி. ஆனால், பாதுகாவலர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இந்தத் தகவல் வேலுநாச்சியாருக்குப் போனதும் பெரியமுத்தனையும், குயிலியையும் அழைத்து, நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அளவுக்கு சுதந்திரம் உண்டு என உத்தரவிட்டார். பின்னர் வேலுநாச்சியாரின் அன்பிற்குரியவராக அவரின் மனதில் இடம்பிடித்தார் குயிலி.
வேலுநாச்சியாருக்கு ஒற்றனாகச் செயல்பட்டார் குயிலியின் தந்தை பெரியமுத்தன். குயிலியும் தந்தைக்கு உதவியாக தகவல்களை கொண்டு வந்து வேலுநாச்சியாருக்குச் சேர்த்ததால், பெண் உளவாளி எனப் பெயர் பெற்றார். ஓர் இரவில் வேலுநாச்சியாரின் சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேலு என்பவர், குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என நினைத்து ஒரு ஓலையைக் கொடுத்து, இந்த ஓலையை ஒரு இடத்தில் சென்று ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதை பெற்றுக்கொண்ட குயிலி அந்த ஓலையை படித்துப் பார்த்தபோது, அதில் நாச்சியாரின் போர் தந்திரங்களும், நுட்பங்களும் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வேலு நாச்சியாரை கொல்வதற்கு சதி வேலை அரங்கேறியதை உணர்ந்தார். உடனே எதையும் யோசிக்காமல் சிலம்ப ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை வெட்டி வீழ்த்தினார். பின்னர் தான் அந்த ஓலையை வேலுநாச்சியாரிடம் கொடுத்தார். தனக்கு எதிரான சதி வலையில் இருந்து தன்னை காத்த குயிலியை மெய்க்காப்பாளராக நியமித்துக் கொண்டார் அரசி வேலுநாச்சியார். பின்னர், தனது பெண்கள் படையான உடையாள் படைக்கு தளபதியாக குயிலியை நியமித்தார்.
வேலுநாச்சியாரை சிறைபிடிக்க ஆங்கிலேயர்கள் பலப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரை நெருங்குவதற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் குயிலி. எனவே குயிலியை தீர்த்துக்கட்ட ஆங்கிலேயர்கள் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். அதேசமயம், ஆங்கிலேயப் படையை சிவகங்கை மண்ணை விட்டு விரட்டி, வேலுநாச்சியாரை பாதுகாக்க சபதம் பூண்டார் குயிலி.
சிவகங்கை அரண்மனையில் ஆங்கிலேயர்கள், நவீன ஆயுதங்களையும் கருமருந்து பொட்டலங்களையும் வெடிபொருள் மூட்டைகளையும் வாங்கிக் குவித்திருந்த தகவல் குயிலிக்கு கிடைத்தது. அதன் மூலம் வேலுநாச்சியாரை முடித்துக் கட்டி, சிவகங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்த தகவலும் கிடைத்தது. எப்படியாவது ஆயுதக்கிடங்கை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார் குயிலி.

விஜயதசமி அன்று அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்கிலேயப் படையில் உள்ளூர் வீரர்களும் இருந்ததால் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், விருப்பாச்சியில் இருந்து கிளம்பிய வேலுநாச்சியாரின் படையில் இருந்து பொதுமக்கள் போல உள்ளே நுழைந்தது குயிலி தலைமையிலான உடையாள் படை. சரியான நேரம் பார்த்து, 'வெற்றிவேல்! வீரவேல்' என்று குயிலி முழங்கியதும் வீரப்பெண் படை வெள்ளையர்களின் கழுத்துகளை வெட்டி வீசியது.
ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி, ஆயுதங்களை எடுத்து பிரயோகிக்க உத்தரவிட்டது தான் தாமதம், ஆங்கிலேயப் படை ஆயுதங்களை எடுக்க ஓடியது. அப்போது விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தன் உடலில் தீவைத்துக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார் குயிலி. ஆங்கிலேயர் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் சாம்பலாகின. வெள்ளையர்களை வேலுநாச்சியாரின் படை வீரர்கள் அழித்தொழித்தனர். குயிலியின் தியாகத்தால் சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
உலகின் முதல் தற்கொலைப்படைப் போராளியாக, இந்திய விடுதலைப் போருக்கு தன் இன்னுயிரை ஈந்த குயிலி, சிவகங்கை மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார். முத்துப்பட்டியில், வீரத்தாய் குயிலியை நினைவுகூரும் வகையில், தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது.
சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வீரத்தாய் குயிலியின் நினைவுச் சின்னமும் உள்ளது. சிவகங்கை அரண்மனையின் முன் வைக்கப்பட்டிருக்கும் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையின் கீழ் குயிலி பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. அந்தக் குறிப்பில், வேலு நாச்சியார் குயிலியின் துணைகொண்டு ஆங்கிலேயப் படையின் வெடிமருந்துக் கிடங்கை அழித்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications