வைகோவுக்காக 28 ஆண்டுகள் உழைத்தேன்! எல்லாம் வீணாகிவிட்டது! புலவர் செவந்தியப்பன் குமுறல்!
சிவகங்கை: வைகோவுக்காக 28 ஆண்டுகள் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டதாக கூறியிருக்கிறார் புலவர் செவந்தியப்பன்.
மதிமுகவில் சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்த புலவர் செவந்தியப்பன் மீது வைகோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தன் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரமில்லை எனக் கூறி அதிர வைத்திருக்கிறார் அவர்.
இதனிடையே இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட சிறப்புத் தகவல் வருமாறு;

28 ஆண்டுகள்
''திமுகவில் 18 ஆண்டுகள் மதிமுகவில் 28 ஆண்டுகள் என மொத்தம் 46 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பவன் நான். வைகோவுக்காக 28 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மதிமுகவில் உழைத்தேன். இன்று அவர் தனது மகனுக்காக என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். என் உழைப்புக்கும், தியாகத்துக்கும் வைகோ கொடுத்த பரிசாக இதை கருதுகிறேன்.''

10 ஆண்டுகளாக
''கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவை மாற்றியமைத்து திடீரென தனக்கு தோதான நபர்களை உள்ளே கொண்டு வந்தார் வைகோ. இப்போது கூட முறைப்படி எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இதனால் என் மீதான ஒழுங்கு நடவடிக்கையே செல்லாது என்பது தான் எனது கருத்து. இன்னும் சொல்லப்போனால் வைகோவுக்கு என் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை.''

இப்படியொரு பரிசு
''எனக்கு இப்படியொரு பரிசை வைகோ தருவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பொதுவெளியில் கட்சியின் சட்டதிட்டத்தை மீறி செயல்பட்டதாக கூறி கடந்த 5-ம் தேதி விளக்கம் கேட்டு வைகோ கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் மீது பதிலளித்து 11-ம் தேதி நான் விளக்கம் கடிதம் அனுப்பினேன். இந்தச் சூழலில் இப்படியொரு அறிவிப்பு வந்திருக்கிறது.''

பழிவாங்கிவிட்டார்
''துரைக்கு எதிராக பேசியதால் என்னை வைகோ பழிவாங்கிவிட்டார். நான் அனுப்பிய விளக்க கடிதம் மீதான விசாரணையே நடத்தாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கட்சியின் சட்டத்திட்டப் படி செல்லாது. அதனால் அவர் என்னை நீக்கியதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு செல்லாத ஒன்று என்று கூறிக்கொள்கிறேன்.''
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications