மெரினாவில் கூட்ட நெரிசலால் யாரும் இறக்கலை! நோய் பாதிப்பால்தான் இறந்தனர்! ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
சிவகங்கை: சென்னை மெரினாவில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் யாரும் இறந்ததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போல் தெரிகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிவகங்கையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் கூறியதாவது: சென்னை மெரினாவில் விமான படை வீரர்களின் சாகச நிகழ்வு வரவேற்கத்தக்கது. இங்க கூட்ட நெரிசலால் யாரும் இறந்ததாக தெரியவில்லை.

மயக்கம், சில நோய்களால் இறந்தது போல் தெரிகிறது. இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும். கருத்துக் கணிப்புகளை நான் ஏற்பதில்லை. ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் போரால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் முயற்சிக்கிறார். அதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்கின்றன. ஈரானில் உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழா காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது.
இந்த நிகழ்வுக்கு வருவோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிகழ்வை காண 10 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது. மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
நேற்றைய தினம் அதிக வெயில் இருந்ததால் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு நிறைய பேர் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த சிகிச்சையிலேயே சரியானது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அது போல் மேலும் 5 பேர் பலியாகிவிட்டனர்.
அவர்களில் ஜான், கார்த்திகேயன், சீனிவாசன், தினேஷ் குமார், மணி ஆகிய 5 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இறப்புகளுக்கு காரணம் போதிய பாதுகாப்பின்மை, போக்குவரத்து வசதியின்மையே காரணமாகும் என பலர் விமர்சித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications