கார் ரேஸ் நடத்தி முடிக்கும் வரை என்னை வெளியே விடக்கூடாது என்பது உதயநிதி உத்தரவு: சவுக்கு சங்கர் பரபர

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: "சென்னையில் கார் ரேஸ் நடத்தி முடிக்கும் வரை நான் சிறையை விட்டு வெளியே வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் என்னை தினம் தினம் புதிய வழக்குகளில் கைது செய்து வருகின்றனர்" எனக் குற்றம்சாட்டி உள்ளார் சவுக்கு சங்கர்.

யூடியூபர் சவுக்கு சங்கர், யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சவுக்கு சங்கரின் பேச்சு குறித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

Savukku shankar Udhayanidhi stalin Police Salem

சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அண்மையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிவகங்கை கூடுதல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை நீதிமன்றம் முன்பு இன்று செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், "சென்னையில் கார் பந்தயம் நடத்தி முடிக்கும் வரையில் நான் சிறையை விட்டு வெளியே வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் நான் தினம் தினம் புதிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகிறேன். என் மீதான எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்" எனத் தெரிவித்தார்.

அண்மையில் சேலம் ஆத்தூரில் செய்தியாளார்களிடம் பேசிய சவுக்கு சங்கர், "என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம், அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருகின்றனர்" எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+