100 நாள் வேலை வேண்டும்.. காரில் வந்து கேட்ட நாம் தமிழர் சீமானின் தாய்.. சிவகங்கையில் என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் 100 நாள் வேலையை முறையாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாள் கோரிக்கை வைத்தார். மக்களுக்காக 100 நாள் வேலை கோரி அவர் காரில் சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள், ஆண்கள், முதியவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

கடந்த 2013-14-ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் ரூ. 155 ஆக இருந்தது. இந்த ஊதியம் தற்போது 2024-25-ம் நிதியாண்டில், ரூ. 279 ஆக அதிகரித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு திட்டத்தால் கடினமான வேலைக்கு செல்ல முடியாத கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் 100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் மனு கொடுத்துள்ளார். அதாவது சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்பதாகும். இங்கு சீமானின் தாய் அன்னம்மாள் வசித்து வருகிறார். இவர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் சீமானின் சொந்த ஊர் மக்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி என்பது சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரணையூரை சேர்ந்த மக்கள் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை வைத்தனர்.
அப்போது சீமானின் தாய் அன்னம்மாளும் கிராம மக்களுடன் சென்றிருந்தார். அவர் போலிரோ காரில் சென்று மக்களுடன் மக்களாக நின்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. அதன்பிறகு மீண்பும் போலிரோ காரில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த காரின் முன்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த வேலையை அவர் வெட்டி வேலை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வேளாண் பணிகளை செய்ய ஆட்கள் இல்லை. விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிடும் வகையில் தான் இந்த திட்டம் உள்ளது.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது. எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக என்று கேட்ட சீமான், கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள்.
பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். புரணி பேசுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது என விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் அவரது தாய் அன்னம்மாள் 100 நாள் வேலையை முறையாக வழங்கும்படி மக்களோடு மக்களாக நின்று மனு செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications