திரும்ப போகனுமா? திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் ‘அவர்’ போக மாட்டார்! எச்.ராஜாவுக்கு வந்த கோபம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில்,
ஆளுநர் தமிழகத்தில் தான் இருப்பார் எனவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தை விட்டு போவதாக இல்லை என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் கண்டனங்கள் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஆளுநர் ரவி பாஜக தலைவர் போல நடந்து கொள்வதாகவும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்கவும் திமுக கூட்டணி கட்சிகள் நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எச்.ராஜா

எச்.ராஜா

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில்,
ஆளுநர் தமிழகத்தில் தான் இருப்பார் எனவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர் என் ரவி தமிழகத்தை விட்டு போவதாக இல்லை என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா ஆவேசமாகப் பேசியுள்ளார். சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு தமிழக அரசின் பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சிவகங்கை நகராட்சியில் நடைபெறும் ஊழலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை நீர் பாதிப்பிற்க்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற அறிவிப்பு, யானை பசிக்கு சோலை பொறி போன்றது இன்னும் ஒரு மழை பெய்தால் சென்னை மிதக்கு காவிரியில் தடுப்பணை கட்டாததால் இன்னும் ஒரு மாத காலத்தில் அப்பகுதி, வறண்டு போய்விடும்

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

மீண்டும் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்து. ஆயுத கடத்தலுக்கு முன்னர் கஞ்சா கடத்தல் நடைபெறும். தமிழ்நாடு கஞ்சா நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென திமுக கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். ஆளுநர் தமிழகத்தில் தான் இருப்பார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல், ஆளுநர் தமிழகத்தை விட்டு போவதாக இல்லை" என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+