தேசியக்கொடி தயாரிப்பதில் மகிழ்ச்சி... சிவகங்கையில் இஸ்லாமிய பெண்கள் பெருமிதம்!
சிவகங்கை : நாட்டின் 75-வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தேசியக்கொடி தயாரிப்பது பெருமையாக இருப்பதாக சிவகங்கையில் இஸ்லாமிய பெண்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நாட்டின் கடந்த நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை மறுநாள், நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாட உள்ளது. இந்த மகத்தான தினத்தை விமர்சையாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் 'Har Ghar Tiranga' (ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், இன்று முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடியைப் பறக்கவிடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். அதன்படி வீடுகளி தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை அருகே ஊராட்சி ஒன்றியங்களுக்கு வழங்க தேசிய கொடி தயாரிக்கும் பணியில் மகளிர் குழுவினர் ஈடுபட்டுவரும் நிலையில், இதில் தங்களது பங்களிப்பை அதிகம் செலுத்திவரும் இஸ்லாமிய சகோதரிகள், இந்த பணியில் ஈடுபடுவதற்கு பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை அருகேவுள்ள சக்கந்தி ஊராட்சியில் தேசிய ரூர்பன் திட்டம் மூலம் மகளீர் குழுவினர் இணைந்து ஆயத்த ஆடை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊராட்சியில் இஸ்லாமிய சமூக மக்கள் அதிகம் வசிக்கும் சூழலில், இந்த மகளீர் குழுவில் அதிகம் இஸ்லாமிய பெண்களே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி தேசப்பற்றை காட்டும் விதமாக, ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் தேசிய கொடியை வீடுகளுக்கு வழங்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேசிய கொடி தயாரிக்கும் பணியை அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மகளீர் குழுக்களே செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில், இந்த சக்கந்தி ஊராட்சியிலும் அந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுவரும் நிலையில் 70 சதவீதம் இஸ்லாமிய பெண்களே தங்களது பங்களிப்பை தந்து கொடிகளை தயாரித்து வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபடுவது தங்களுக்கு பெருமையளிப்பதாகவும், சுதந்திர போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு இருந்ததைபோல், 75 வது சுதந்திர தினத்திலும் தங்களது பங்களிப்பு இருப்பது பெருமை என்றும், இது மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாகவும் இஸ்லாமிய சகோதரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications