'யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்'.. 125 கிடாக்களுடன் நெகிழவைத்த குல தெய்வ வழிபாடு
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ., நடந்தே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
குல தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்களின் வழிபாட்டு முறையாகும். எங்கே இருந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும் குல தெய்வ வழிபாட்டிற்காக ஒவ்வொரு வருடமும் மக்கள் ஒற்றுமையாக வருவார்கள். ஒவ்வொரு கோடைக்காலத்தின் போதும், குலதெய்வ வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடக்கும்.

மாசி மாதம் தொடங்கி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் குலதெய்வ வழிபாடுகள் அதிகமாக நடக்கும். மக்கள் விரதம் இருந்து, தங்கள் குலதெய்வங்களை சொந்த பந்தங்களுடன் சென்று வழிபடுவார்கள்.
இந்த குலதெய்வ வழிபாடுகள், உறவுகளின் வலிமையையும், பாசத்தையும், அன்பையும், தெய்வ பக்தியையும் மக்களிடையே வளர்க்கும். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ., நடந்தே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சிவகங்கை அருகேயுள்ள பெருமாள்பட்டி, இலுப்பக்குடி கிராமங்களைச் சேர்ந்த 65 பங்காளிகள், நரியனேந்தலில் உள்ள முத்தையா கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலத்தெய்வ வழிபாடு நடத்துவார்கள். கொரோனாவால் 5 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று சாமி கும்பிடச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
கிராம மக்கள் பலர் 125 கிடாக்களுடன் 10 கி.மீ., தூரம் கோயிலுக்கு நடந்தே சென்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்ற அவர்களின் பின்னால் 65 சரக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. நேற்றிரவு கோயிலை அடைந்த அவர்கள், இன்று (ஜூன் 9) காலை கோழிகளை பலியிட்டு வழிபாட்டை தொடங்க உள்ளார்கள்.
வரும் ஜூன் 10-ம் தேதி கொண்டு போன கிடாக்களை வெட்டி வழிபாடு நடத்துகிறார்கள் ஜூன் 11-ம் தேதி மீண்டும் கிடா வெட்டி படையலிடுகின்றனர். பின்னர் அன்று மாலை வாகனங்களில் ஊருக்கு திரும்புகிறார்கள்
இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, கடந்த காலங்களில் குழந்தைகள், சாமான்களை ஏற்றிச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். தற்போது சரக்கு வாகனங்களை பயன்படுத்துகிறோம். கொரோனா பிரச்சனை 5 ஆண்டுகளுக்கு பின்னர் சாமி கும்பிடுகிறோம். மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்து வழிபடுவோம் என்றார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications