’கருப்பு வியாழன்’ ஏப்ரல் 30 செவுரு..ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான்! ஒரே நாளில் வீழ்ந்த லெஜண்டுகள்!
சென்னை: ஏப்ரல் 30ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது. சிஎஸ்கே, தோனியின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்து விட்டது போல பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால் அதே நாளில் உலகில் பிரபலமான லெஜெண்ட் வீரர்கள் பலரும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான் என நான்கு முக்கிய ஜாம்பவான்கள் நான்கு தொடர்களில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அதனை கருப்பு வியாழன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ருதுராஜ் தலைமையில் மஞ்சள் படை களம் இறங்கியது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் போகப் போக அணியின் நிலைமை தலைகீழாக மாறியது. பேட்டிங், பில்டிங், பௌலிங் என அனைத்து துறைகளிலும் மூத்த வீரர்கள் சொதப்ப, கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. நடப்பு தொடரில் 10 போட்டியில் இதுவரை இரண்டு வெற்றியை மட்டுமே பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

ஐபிஎல் 2025
ஜடேஜா, ருதுராஜ் என தலைமை ஏற்றவர்கள் சொதப்ப, மீண்டும் கேப்டன் பதவியேற்ற தோனியால் கூட சென்னை அணியை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் கதையும் தோனியின் கதையும் முடிந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் உலகில் பல பகுதிகளில் நடந்த கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் உலகின் பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முக்கிய வீரர்களும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். அதனால் அந்த நாளை கருப்பு வியாழன் என்கின்றனர் ரசிகர்கள்.

ரொனால்டோ
சவுதி அல்நசர் அணி, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ஜப்பானின் காவசாக்கி ஃப்ரண்டேல் அணியிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ரொனால்டோ போட்டியின் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய கோல் அடிக்கும் வாய்ப்பை வீணாக்கினார். அதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த சீசனில் எந்த கோப்பையும் வெல்ல முடியாமல் போனது, ரொனால்டோவுக்கும் அல்நசருக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தோனி
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த சீசனில் பிளேஆஃப் போட்டிகளுக்கு முன்னரே வெளியேறியது. தோனி மீண்டும் கேப்டனாக இருந்தும், அணியின் சரிவு தொடர்ந்தது. 10 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி
இன்டர் மியாமி அணி, கான்காகாஃப் சாம்பியன்ஸ் கப்பின் அரையிறுதியில் வென்கூவர் அணியிடம் 3-1 என்ற தோல்வியடைந்தது. மொத்தமாக 5-1 என்ற கணக்கில் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது. மெஸ்ஸி ஒரு அட்டகாச பாஸ் கொடுத்தும், அடுத்தபடியாக அவரிடம் இருந்து சிறப்பு திறமைகள் தெரியவில்லை. வயது மூப்பும், நம்பிக்கை இல்லாத டீம் பிளேவும் மியாமியின் தோல்விக்கு காரணமாக காணப்படுகின்றன.

லெப்ரான்
என்பிஏ பிளேஆஃப்பில் லேக்கர்ஸ் அணி, மின்னசோட்டாவிடம் 103-96 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் 50 வெற்றிகள் இருந்தும், முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் லெப்ரானுக்கு மகன் பிரான்னியுடன் ஒரே மைதானத்தில் விளையாடிய மகிழ்ச்சி கிடைத்தது சற்று தோல்வியை கொஞ்சம் ஆறுதலாக மாற்றியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications