11 வருடங்களுக்கு முன்பே! கோலி பற்றிய தீர்க்கதரிசனம் சொன்ன ஜோதிடருக்கு நேர்ந்த கதி! உடலே சிலிர்க்குதே
சென்னை: நேற்று சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை கோலி முறியடித்த நிலையில் கேரள ரசிகர் சிஜூ பாலநந்தன் என்பவரின் பேஸ்புக் போஸ்ட் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
கிரிக்கெட் உலகில் மிக அதிக ஒருநாள் செஞ்சுரி அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 50 செஞ்சுரிகளை இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறித்துள்ளார்.

சச்சின் மொத்தமாக 100 சதங்கள் அடித்துள்ளார். இதில் 49 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தது. 51 சதங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்தது . இப்போது விராட் கோலி 29 டெஸ்ட் போட்டி சதங்களை அடித்துள்ளார். அதேபோல் 1 டி 20 சதம் அடித்துள்ளார். அதோடு நிற்காமல் 50 ஒருநாள் சதம் அடித்துள்ளார். மொத்தமாக 80 சதம் அடித்துள்ளார்.
கோலி சச்சினின் மொத்த சதங்களாக 100 ஐ முறியடிக்க இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும். இதில் இன்னும் 3-4 வருடங்கள் கோலி ஆடும் வாய்ப்புகள் உள்ளன. கோலி இதே பார்மில் தொடரும் பட்சத்தில் சச்சினின் இந்த சாதனையையும் முறியடிக்க முடியும். அவர் இருக்கும் பிட்னஸ் காரணமாக கண்டிப்பாக இதே பார்மில் தொடரும் வாய்ப்புகள் உள்ளன.
சாதனையை முறித்தார்: கடந்த முறை வான்கடே மைதானத்தில் சதம் அடித்து இருந்தால் கோலி சச்சின் சாதனையை சமன் செய்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சச்சின் முன் அந்த சாதனையை செய்ய முடியாமல் கொல்கத்தா மைதானத்தில் கோலி சச்சின் சாதனையை சமன் செய்தார். அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.. சச்சின் சாதனையை அதே வான்கடே மைதானத்தில் இன்னும் 2 போட்டிகளில் முறியடிக்க போகிறார் என்று. அது நேற்று நடந்துவிட்டது. சச்சினுக்கு முன்.. அவருக்கு தலைவணங்கி அவரின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
இதற்கு சச்சின் நெகிழ்ச்சியாக முகம் முழுக்க சிரிப்போடு.. அன்போடு கொடுத்த ரியாக்சன் பலரும் கவர்ந்தது. நீதான் ஹீரோ என்பது போல முத்தங்களை வாரி பொழிந்து அனுஸ்கா சர்மாவும் அன்புகளை பொழிந்தார்.
சாதனை: இந்த சாதனையை படைத்தும்.. சச்சினுக்கு முன் மட்டும் தலைவணங்காமல்.. தனது மனைவியிடமும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கோலி கைகாட்டினார். டேவிட் பெக்கம் தொடங்கி உலகின் பல பிரபலங்கள் மேடையில் அவர்களுக்கு முன்பாக கோலி இந்த இமாலய சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் உலகில் தான் ஒரு கோட் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோலி!
டிரண்டாகும் போஸ்ட்: நேற்று சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை கோலி முறியடித்த நிலையில் கேரள ரசிகர் சிஜூ பாலநந்தன் என்பவரின் பேஸ்புக் போஸ்ட் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
சச்சினின் 49 சதங்களை கோலி முறியடிப்பார் என 2012ம் ஆண்டே கணித்த இவர் கண்டித்துள்ளார். அதனால் மட்டும் இந்த போஸ்ட் டிரெண்டாகவில்லை.

கேரள ரசிகர் சிஜூ பாலநந்தன். நேற்று அதனை கோலி மெய்யாக்கியுள்ளார். விராட் சதம் அடிக்கும் போதெல்லாம், அந்த நபர் தனது போஸ்டிற்கு சென்று சதத்தின் எண்ணை கமெண்ட் செய்துள்ளார். கோலியின் 33வது செஞ்சுரி வரை அப்டேட் செய்துள்ளார்.
கோலி 33 செஞ்சுரி அடித்த பிறகுதான் அந்த சோகமான நிகழ்வு நடந்தது. சிஜூ விபத்தில் இறந்துவிட்டார். கார் விபத்தில் அவர் பலியாகி இருக்கிறார். விராட்டின் 33 செஞ்சுரிக்கு பிறகு, அவரது நண்பர்கள் அந்த போஸ்டிற்கு சென்று 34,35,36....46,48,49 என்று கமெண்ட் செய்துள்ளனர். சிஜுவிற்கு மரியாதை செய்யும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர். நேற்று அதே போஸ்டில் சென்று இபோது 50 என்று கமெண்ட் செய்துள்ளனர்.
சிஜுவின் நண்பர்கள் அவருடைய நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்து.. அந்த சாதனை முறியடிக்கப்பட்டதும் அதை பகிர்ந்து தனது நண்பனை நினைவு கூர்ந்து உள்ளனர். சிஜூ இன்று உயிரோடு இல்லை என்றாலும், அவரின் தீர்க்கதரிசனம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் 11 வருடங்களுக்கு முன் கோலி பெரிய ஆள் ஆகும் முன்பே அவர் இந்த கணிப்பை செய்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications