இந்தியாவில் விளையாட முடியாது! டி20 உலககோப்பை போட்டியை இலங்கைக்கு மாற்ற ஐசிசியிடம் கதறும் வங்கதேசம்
டாக்கா: டி20 உலககோப்பை போட்டிக்காக இந்தியா வர பயமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம். எங்களின் போட்டியை வங்கதேசத்துக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் சார்பில் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 8 ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டோம். எங்களுக்கான அனைத்து போட்டியையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது: ‛‛தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் வங்கதேச அணியினரின் பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. இதனால் வங்கதேச அரசின் ஆலோசனை கருத்தில் கொண்டு எங்கள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யாது.
இதனால் வங்கதேசத்தின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு இடத்துக்கு மாற்ற வேண்டும். வங்கதேச வீரர்கள், அணியின் பிற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை பாதுகாப்பதற்கும், போட்டி சுமூகமாக நடப்பதற்கும் இத்தகைய நடவடிக்கை அவசியம்'' என கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் பிப்ரவரி 7 ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணியையும், பிப்ரவரி 9 ம்தேதி இத்தாலியையும், பிப்ரவரி 14ல் இங்கிலாந்தையும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. அதன்பிறகு பிப்ரவரி 17 ம் தேதி நேபாள அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது வரை ஐசிசி தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை.
வங்கதேசத்தின் இந்த முடிவின் பின்னணியில் அந்த நாட்டில் நடக்கும் வன்முறை தான் முக்கிய காரணம். தற்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அங்குள்ள இடைக்கால அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்துத்துவா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் கேகேஆர் அணி ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிசிசியை உத்தரவின்படி முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தினர் நம் நாட்டில் விளையாட வந்தால் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரலாம் என்று நினைத்து போட்டியை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளது.












Click it and Unblock the Notifications