Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1,200 கோடி.. ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டால் இழக்கப்போகும் தொகை.. கவலையில் பிசிசிஐ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தால், பிசிசிஐ நிர்வாகத்திற்கு ரூ.1,200 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள், விளம்பர வருவாய், அணி உரிமையாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 நாட்களாக நடத்தப்படவில்லை. தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில் ஒரு வாரத்திற்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

BCCI might suffer a loss of Rs 1 200 Crores if IPL 2025 is postponed to September due to India - Pakistan Tensions

அதேபோல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் தொடர் மீண்டும் உடனடியாக தொடங்கப்படுமா என்ற சந்தேகம் இருப்பதால், வீரர்களை சொந்த ஊருக்கு அனுப்பலாம் என்று வாய்மொழியாக கூறி இருக்கிறார்கள். இதனை நம்பி 10 அணிகளின் நிர்வாகங்களும் அந்தந்த வீரர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதி திரும்ப ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் சேர்மேன் அருண் துமால், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை உடனடியாக தொடங்குவதற்கான பணிகளை செய்ய வேண்டும். அதற்கு பங்குதாரர்கள், அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

அதன்பின் மைதானங்கள் மற்றும் தேதிகள் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனால் ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சொந்த ஊருக்கு சென்ற வெளிநாட்டு வீரர்கள் எப்போது திரும்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அவர்களின் வருகையை பொறுத்தே ஐபிஎல் தேதிகளை முடிவு செய்ய முடியும்.

இன்னொரு பக்கம் 5 நாட்களாக நடத்த முடியாமல் இருக்கும் போட்டிகளை திட்டமிட்டபடி மே 26க்குள் நடத்தி முடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் புறப்பட்டுவிடுவார்கள். இதனாம் மே மாததிலேயே மீண்டும் ஐபிஎல் தொடரை நடத்துவது சாத்தியமா என்ற கேள்வி உள்ளது.

அதேபோல் ஐபிஎல் தொடரை செப்டம்பர் மாததிற்கு ஒத்தி வைத்தால், பிசிசிஐ நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். ஏனென்றால் ஒரு ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்வதற்காக மட்டும் ரூ.54.5 கோடி பிசிசிஐ-க்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 16 போட்டிகளை ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என்றால் ரூ.872 கோடி நஷ்டம் ஏற்படும்.

அதேபோல் டைட்டில் ஸ்பான்சர் டாடா உட்பட ஏராளமான ஸ்பான்சர்கள் சுமார் ரூ.100 கோடி வரையிலும், அணி உரிமையாளர்கள் சுமார் ரூ.30 கோடி வரையிலும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மொத்தமாக ரூ.1,200 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பிசிசிஐ விரைவாக ஐபிஎல் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+