பேட்டிங்கா அல்லது கேப்டன்சியா.. எது உங்களுக்கு அதிக பயம்? ருதுராஜ் கொடுத்த சோகமான பதில்!
சென்னை: கேப்டன்சி அல்லது பேட்டிங் ஆகிய இரண்டில் எதன் மீது அதிக பயம் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதில் அளித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியின் கீழ் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வரும் சூழலில், அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளுக்கு எதிராகவும் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருப்பதே, சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிஎஸ்கே அணியுடன் தோனியும் பயணிப்பதை தவிர்த்துவிட்டார். காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் பயிற்சி மைதானத்திலேயே குடும்பத்தினருடன் முகாமிட்டுள்ளார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் தனித்துவிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அத்தனை முடிவுகளையும் ருதுராஜ் கெய்க்வாட் சொந்தமாக எடுக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் குறைவாக இருப்பதால், வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஃபீல்டிங் பிளேஸ்மெண்ட்களில் ருதுராஜ் கெய்க்வாட் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பேட்டிங் அல்லது கேப்டன்சி.. இந்த இரண்டில் எதன் மீது அதிக பயம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ருதுராஜ் கெய்க்வாட் யாரும் எதிர்பார்க்காதவாறு "டாஸ்" என்று பதில் அளித்துள்ளார். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக கேப்டன்சி மேற்கொண்டுள்ள 21 போட்டிகளில் சுமார் 16 போட்டிகள் வரை டாஸ் தோற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் போது ருதுராஜ் கெய்க்வாட் சுமார் 11 டாஸில் தோற்றிருந்தார். இதனால் வரும் காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் இன்னும் முழுமையான ஃபார்முக்கு வரவில்லை. அடுத்த போட்டியில் ஃபார்முக்கு வருவார் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications