இந்தியாவிற்கு உறுத்தலாக இருந்த அந்த 3 வீக்னஸ்.. நேற்று ஒரே மேட்சில் அதுவும் கிளியர்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணிக்கு உறுத்தலாக இருந்த 3 விஷயங்கள் நேற்று சரி செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணி இதன் மூலம் எந்த விதமான வீக்னஸும் இல்லாத அணியாக உருவெடுத்து உள்ளது.

நேற்று இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா எளிதாக வென்றது. நேற்று முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார்.

How did India tackle its 3 major weakness easily in the World Cup Match against Sri Lanka?

இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். முக்கியமாக இன்று ஷார்ட் பந்துகளில் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜா 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார். இதனால் 300 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி 357-8 ரன்கள் எடுத்தது.

இலங்கை தோல்வி: இதன்பின் இலங்கை அணி வந்த வேகத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். பும்ரா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அதன்பின் சதீர சமரவிக்ரம, மீண்டும் டக் அவுட் ஆக, குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். அதை தொடர்ந்து சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ஆனால் அதன்பின் சிராஜ் மட்டுமின்றி ஷமியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தார். ஷமி நேற்று 5 விக்கெட் எடுக்க இந்திய அணி எளிதாக வென்றது.

3 வீக்னஸ்; இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணிக்கு உறுத்தலாக இருந்த 3 விஷயங்கள் நேற்று சரி செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணி இதன் மூலம் எந்த விதமான வீக்னஸும் இல்லாத அணியாக உருவெடுத்து உள்ளது.

வீக்னஸ் 1 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். முழுமையாக ஷார்ட்டாக் வராமல் பாதி ஷார்ட் பந்திற்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை எடுத்த ரன்கள் - 128 ரன்கள் மட்டுமே ஆகும்.,
இன்னிங்ஸ் - 6
சராசரி - 32
ஸ்ட்ரைக் ரேட்- 81.01 என்று மோசமாக ஆடி உள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பார்மிற்கு திரும்பினார். நேற்று இலங்கைக்கு எதிராக இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்.

வீக்னஸ் 2 - இந்த சீசனில் சிராஜ் நேற்று மேட்ச் வரை பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. இதனால் நேற்று அவர் ஆடுவதே சந்தேகமாக இருந்தது. ஆனால் நேற்று பார்மிற்கு திரும்பினார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. இதனால் இந்தியாவின் பவுலிங் முழுமை அடைந்துள்ளது.

வீக்னஸ் 3 - இந்த சீசனில் தொடக்கத்தில் டெங்கு காரணமாக ஆடாமல் அதன்பின் அணிக்குள் வந்த கில் மோசமான பார்மில் இருந்தார். ஆனால் நேற்று அவரும் பார்மிற்கு திரும்பினார். முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+