எப்புட்றா.. பறவையாய் மாறிய பிலிப்ஸ்.. ஒத்தக்கை கேட்சால் ஆடிப்போன விராட் கோலி.. சோகமான அனுஷ்கா சர்மா

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த பந்தை பறவை போல் பறந்து நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் கேட்ச் பிடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பது புரியாமல் விராட் கோலி க்ரீஸிலேயே நின்று கொண்டிருக்க, கேலரியில் இருந்த அனுஷ்கா சர்மா சோகத்தை வெளிப்படுத்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணியிடம் தரமான ஸ்பின்னர்கள் இருப்பதால், துபாய் பிட்சில் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் இருக்கும் என்று கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ind vs nz virat kohli anushka sharma champions trophy 2025 2025

இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சுப்மன் கில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் விராட் கோலி தனது 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதனால் அவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவரது ஆட்டத்தை பார்க்க மனைவி அனுஷ்கா சர்மாவும் வந்திருந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்று ரோஹித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் விராட் கோலி மீது கூடுதல் சுமை ஏற்பட்டது. 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்தனர். அப்போது 7வது ஓவரை மேட் ஹென்ரி வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து அசத்தினார்.

அப்போது பாயிண்ட் திசையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஃபீல்டிங் நின்று கொண்டிருந்தார். இதனை அறிந்தும் விராட் கோலி ஹென்ரி வீசிய பந்தை பிலிப்ஸ்-க்கு கொஞ்சம் தள்ளி அடித்தார். ஆனால் கழுகு போல் பந்தை பார்த்து கொண்டிருந்த பிலிப்ஸ் ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதனை க்ரீஸில் இருந்து பார்த்த விராட் கோலி, ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பது புரியாமல் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த பந்துக்கு ஒரு நிமிடம் முன்பாகதான் தினேஷ் கார்த்திக் வர்ணனையில் உலகின் தலைசிறந்த ஃபீல்டர் என்று பிலிப்ஸை புகழ்ந்தார். அதற்கு ஏற்ப அபாரமான ஒரு கேட்சை பிடித்து விராட் கோலி 11 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

பெவிலியனை நெருங்கிய போது விராட் கோலியும் கொஞ்சம் சிரித்து கொண்டே ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அப்போது அரங்கில் இருந்த அவரின் மனைவி அனுஷ்கா சர்மா சோகத்தை வெளிப்படுத்தினார். தனது 200வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததை போல மீண்டும் தனது 300வது போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், விராட் கோலியின் விக்கெட்டால் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+