முரண்பாடுகளின் மூட்டையா இருக்காரே.. இந்திய அணியில் கம்பீர் செய்யும் சேட்டைகள்.. என்ன நடக்கிறது?
மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முரண்பாடுகளின் மூட்டையாக மாறி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் 22 முறை டக் அவுட்டானாலும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பேன் என்று பேசிய கம்பீர், சுப்மன் கில்லுக்காக அவரை பெஞ்சில் அமர்த்த வைத்துள்ளதோடு, 3 வடிவங்களுக்கும் ஒருவரே கேப்டனாக செயல்பட முடியாது என்று பேசிவிட்டு, தற்போது சுப்மன் கில்லை 3 வடிவங்களுக்கும் தயார் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த நாள் முதல், அவர் பேசும் விஷயங்களுக்கு எதிராகவே முரண்பாடாக செயல்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று பேசி வந்தார்.

அதேபோல் சீனியர் வீரர்களை ஒதுக்கப்படக் கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக வந்தபின், இந்திய அணி டிரான்ஷியன் நேரத்தில் உள்ளது. ஆனால் அதனை ஒருபோதும் காரணமாக சொல்ல மாட்டேன் என்றும், தோல்விக்கு பொறுப்பேற்பதே தலைவனுக்கு அழகு என்றெல்லாம் டயலாக் பேசி வந்தார். குறிப்பாக 3 வடிவங்களுக்கும் இனி ஒரு கேப்டன் என்ற ஸ்டைல் சரி வராது என்று கூறி வந்தார்.
ஆனால் இந்திய அணியில் கம்பீர் இந்த அத்தனை விஷயங்களுக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார். முதற்கட்டமாக சஞ்சு சாம்சனை இந்திய அணிக்குள் கொண்டு வந்த கம்பீர், நீ 22 முறை டக் அவுட்டானாலும் வாய்ப்பு கொடுப்பேன் என்றார். ஆனால் சஞ்சு சாம்சனை விடவும் சுமாராக விளையாடி வரும் சுப்மன் கில்லை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை பெஞ்ச் செய்திருக்கிறார்.
சுப்மன் கில்லை போல் தொடர்ந்து 14 வாய்ப்புகள் கூட சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில், டி20 அணிக்கு துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் மோசமான விளையாடினாலும், போஸ்டர் பாய் என்பதால் வேறு வழியின்றி கம்பீர் பிளேயிங் லெவனில் சேர்த்து வருகிறார்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த பின், இது இளம் வீரர்களை கொண்ட அணி என்றும், டிரான்ஷிஷன் நேரத்தில் இருப்பதாகவும் காரணங்களை அடுக்கினார். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அடைந்த வெற்றிக்கு தாமே காரணம் என்றும் கம்பீர் பறைசாற்றி கொண்டார்.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முரண்பாடுகளின் மூட்டையாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கம்பீரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளரை கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க தொடங்கி இருக்கின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications