Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன இப்படி ஓடுறாரு? இலங்கை வீரர்களை கதறவிட்ட சிராஜ்.. இடையில் கோலி தந்த ரியாக்சன்.. போச்சே!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியா இலங்கை இடையிலான ஆசிய கோப்பை பைனல் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதில் முகமது சிராஜ் செய்த ஓவர் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது.

India vs Srilanka final: Kohli gave a epic reaction amid the Siraj bowling and wickets

ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

முன்னதாக 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹமத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார்

அப்போது இந்த அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக சஞ்சு சாம்சன் எடுக்கப்படாதது கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல் சூர்ய குமார் யாதவ் எடுக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது. கே எல் ராகுல் நேரடியாக அணிக்குள் எடுக்கப்பட்டதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்த நிலையில்தான் ஆசிய கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிக்கொண்டு இருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடக்கத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் அதன்பின் நேபாளம், பாகிஸ்தான், இலங்கை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இந்தியா பைனல்ஸ் சென்றுள்ளது.

கடைசியாக நடந்த பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பான பேட்டிங், சிறப்பான பவுலிங் என்று இந்திய அணி அசத்தி உள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை பைனல்சுக்கு இந்தியா சென்றுள்ளது.

அதன்பின் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தாலும் மீண்டும் தற்போது பைனல்ஸ் போட்டியில் இந்திய அணி கலக்கி வருகிறது. இன்று நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ரோஹித் சர்மா(கேட்ச்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல்(வ), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்று இந்திய அணியில் ஆடுகிறார்கள்.

விக்கெட்: இதில் தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் சிராஜ் மட்டும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார்.

அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த 4வது ஓவரின் 5வது பந்தில் ஹாட் டிரிக் எடுக்க வேண்டிய நிலையில் சிராஜ் பவுண்டரி கொடுத்தார். இந்த பந்தை பிடிக்க சிராஜ் ஸ்பிரிண்ட் செய்து ஓடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதை பார்த்து கோலி மைதானத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவரை பார்த்து சுப்மான் கில்லும் குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+