ஆர்சிபிக்கு நல்ல நேரம் இது.. 1993ல் பிறந்த ரஜத் பட்டிதார் ஜாதகத்தை பாருங்க.. ஜோதிடர் லோபோ கணிப்பு!
மும்பை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் நாளை தொடங்கவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் முடிந்து முதல் சீசன் நடக்கவுள்ளதால், இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
ஏனென்றால் மும்பை அணி கடந்த 5 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவிர்த்து வருகிறது. சிஎஸ்கே அணி புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் கீழ் 6வது கோப்பையை வெல்லுமா, பஞ்சாப் அணி 11 சீசன்களுக்கு பின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா, ராஜஸ்தான் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

ஜோதிடர் லோபோ கணிப்பு
குறிப்பாக 18வது சீசனிலாவது ஆர்சிபி அணி தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்று அந்த அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் பிரபல ஜோதிடரான க்ரீன் லோபா ஐபிஎல் தொடரில் எந்த அணி எப்படி செயல்படும் என்று கணித்துள்ளார். கேப்டன் பிறந்த ஆண்டு, தேதி மற்றும் நேரத்தை வைத்து லோபோ தனது கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கேகேஆர், குஜராத்
அதன்படி, நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லை என்று கணித்துள்ளார். 1988ல் பிறந்த கேப்டன் அஜிங்கியா ரஹானேவால் கோப்பையை வெல்ல முடியாது என்று கணித்திருக்கிறார். அதேபோல் குஜராத் அணிக்கும் இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடையாது. ஏனென்றால் அந்த அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா 1979லும், சுப்மன் கில் 1999லும் பிறந்திருக்கின்றனர்.
லக்னோ அணிக்கு வாய்ப்பு?
வரும் காலங்களில் இவர்களின் கூட்டம் வெல்ல முடியும். ஆனால் இந்த சீசனில் இவர்களால் வெல்ல முடியாது என்று கணித்துள்ளார். தொடர்ந்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். அவராலும் இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்பே கிடையாது. இவர்களுக்கு அடுத்த சீசனில் மிகச்சிறந்த ஆண்டாக அமையும்.
சிஎஸ்கே ஜாதகம்
அதேபோல் சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்புகள் குறைவு. அவர் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். சிறந்த அணியாக சிஎஸ்கே அணி கட்டமைக்கப்பட்டாலும், இந்த சீசனில் வாய்ப்பு கிடையாது. அதேபோல் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியை கணித்துள்ளார்.
3 பேரின் பங்களிப்பு
இந்த அணியின் ராபின் மின்ஸ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் கணித்துள்ளார். 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் பிறந்த கேப்டன்களே இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உண்டு. இதனால் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்ல்ல வாய்ப்புள்ளது. ஏனென்றால் அக்சர் படேலின் ஜாதகத்தில் அவருக்கு சிறந்த நேரம் இருப்பதாக கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் - ராகுல் டிராவிட்
கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் பெயர் உள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 1994ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த அணியில் 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் பிறந்த ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, ஆகாஷ் மத்வால், சந்தீப் சர்மா உள்ளிட்டோர் வாங்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரை மறக்காதீங்க
அதேபோல் பஞ்சாப் அணி டாப் 3 இடங்களை பிடிக்கும் என்று கணித்திருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரின் ஜாதகத்தில் நிறைய ஐபிஎல் கோப்பையை வெல்வார் என்று இருக்கிறது. ஐதராபாத் அணி நிச்சயமாக டாப் 2 இடங்களை பிடிக்கும். ஐபிஎல் வரலாற்றில் தோனி, ரோஹித் சர்மாவுக்கு பின் பேட் கம்மின்ஸ்-க்கு ஜாதகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இவர் 1993ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
ரஜத் பட்டிதார் ஜாதகம்
ஆனால் இம்முறை ஆர்சிபி அணி தங்களின் முதல் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார். ரஜத் பட்டிதார் 1993ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் ஜாதகத்தில் அனைத்து கோள்களும் மிகச்சிறப்பாக உள்ளது. அதேபோல் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆர்சிபி வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications