CSK: 156 ரன்களுக்கே இப்படியா.. சிஎஸ்கே மிடில் ஆர்டரால் நொந்துபோன ரசிகர்கள்.. மாற்றம் தேவையா?
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 18 ஓவர்களில் வெல்லும் என்று பார்க்கப்பட்ட போது, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து சிஎஸ்கே வென்றது ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி பவர் பிளே ஓவர்களிலேயே கலீல் அஹ்மத் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்ட மும்பை அணி, அதன்பின் 3 ஸ்பின்னர்களிடம் மொத்தமாக விக்கெட்டை பறிகொடுத்தது.

இதன் காரணமாக மும்பை அணியால் 156 ரன்கள் என்ற இலக்கை மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது. பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தாலும், சிஎஸ்கே அணி 18 ஓவர்களிலேயே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ருதுராஜ், ரச்சின், ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, சிவம் துபே உள்ளிட்ட அனைவருமே ஸ்பின்னர்களை எளிதாக சமாளிக்க கூடியவர்கள்.
இதனால் ரன் ரேட் உயரும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் 19.1 ஓவர்களில்தான் சிஎஸ்கே அணி வெற்றியை பெற்றது. இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ருதுராஜ் கொடுத்த அதிரடிக்கு பின், ஆட்டத்தை விரைவாக முடிக்காமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை விட்டது தவறு என்று புலம்பி வருகின்றனர்.
அறிமுக வீரரான விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆட்டம் மாறிவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரண் உள்ளிட்ட அனைவருமே பவுலர்களை அட்டாக் செய்ய முயற்சித்துதான் விக்கெட்டை பறிகொடுத்தனர். யாரும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறி விக்கெட்டை பறி கொடுக்கவில்லை.
இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதாக பார்க்க தேவையில்லை. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்பின்னர்களுக்கு உதவியான பிட்ச்சாக இருக்கும். 3 ஸ்பின்னர்களை வைத்து சோக் செய்வதுதான் சிஎஸ்கே அணியின் முதன்மை திட்டம். அதன்பின் எளிதாக 170 ரன்களை சேஸிங் செய்து வெல்லவே சிஎஸ்கே அணியின் 2வது திட்டம்.
இருந்தாலும் இந்த பேட்டிங் ஆர்டரை வைத்து கொல்கத்தா, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மைதானங்களில் வெல்வது சிரமமாக இருக்கும். ஆனால் பவுலர்கள் கூடுதல் பலமாக இருப்பது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications