இம்பேக்ட் பிளேயராக ரோஹித்.. 5 கோப்பை ஜெயித்த கேப்டன்டா.. அவமானப்படுத்தும் மும்பை.. காரணம் என்ன?
சென்னை: சிஎஸ்கே அணியின் வெற்றியும், மும்பை அணியின் இளம் ஸ்பின்னரான விக்னேஷ் புத்தூரின் எழுச்சியும் நேற்றைய ஆட்டத்தில் பல்வேறு விஷயங்களை மறைத்துவிட்டது. குறிப்பாக மும்பை அணிக்கு 5 கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாட வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக தொடர்ச்சியாக 13வது ஆண்டாக மும்பை அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடிய 6 போட்டிகளில் அனைத்திலும் மும்பை அணி தோல்வியடைந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு ஹர்திக் பாண்டியா இல்லை, பும்ரா இல்லை என்று காரணங்களை கூறினாலும், மும்பை அணியின் பவுலிங் கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. பும்ரா இல்லாமல் மும்பை அணியின் பவுலிங் முழுமை பெறாது என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணி நிர்வாகத்தால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
அதாவது வழக்கம் போல் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தனது மோசமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இடதுகை பவுலரை பார்த்ததும் டக் அவுட்டாகி ரோஹித் சர்மா வெளியேறினார். அதன்பின் ரோஹித் சர்மா ஃபீல்டிங் செய்யவே களத்திற்கு வரவில்லை. அவரை இம்பேக்ட் பிளேயராக மட்டுமே மும்பை அணி பயன்படுத்தியது தெரிய வந்தது.
அதாவது பேட்டிங் முடிந்த பின் மும்பை அணி பவுலிங் செய்ய வந்த போது, விக்னேஷ் புத்தூர் களம் புகுந்தார். ரோஹித் சர்மா ஒரு ஓரத்தில் ஓய்வறையில் அமர்ந்து போட்டியை பார்த்து கொண்டிருந்தார். ஏற்கனவே கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியில் களமிறங்கவில்லை. இதனால் பொறுப்பு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கும் போது, அவருக்கு உதவியாக ரோஹித் சர்மா இருப்பார் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பை அணி நிர்வாகமோ, 5 முறை கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனை தேவையில்லை என்று முடிவு எடுத்துள்ளது. இதற்கு பின் ரோஹித் சர்மாவின் கடந்த சீசன் அரசியலே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த சீசனில் மும்பை அணி இரு பிரிவுகளாக செயல்பட்டது.
இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மாவுக்கு கீழும், வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழாகவும் செயல்பட்டு வந்தனர். இதனால் கடந்த சீசனின் பாதியிலேயே ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப்பட்டார். அதனை இந்த சீசனிலும் மும்பை அணி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் ரோஹித் சர்மாவால் பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்ய முடியாது என்பதும் முக்கிய காரணமாகும்.
கவர்ஸ், ஸ்லிப் திசை தவிர்த்து ரோஹித் சர்மாவால் எந்த திசையிலும் ஃபீல்டிங் செய்ய முடியாது. ஏனென்றால் ரோஹித் சர்மா விரைவாக ஓடிச் சென்று பந்துகளை தடுத்து நிறுத்தும் அளவு ஃபுட்னஸ் உடன் செயல்பட்டதில்லை. இதனால் ரோஹித் சர்மாவின் சேவை தேவையில்லை என்று மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications