மத்ததை விடுங்க.. ருத்துராஜ் கேப்டன்சியை பாருங்க.. ஒரே மேட்சில் இத்தனை தவறான முடிவுகளா? கொடுமை!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவருக்கு 183-6 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு கேப்டனாக ருத்துராஜ் நிறைய தவறுகளை செய்தார். அவர் செய்த தவறுகளை இங்கே பார்க்கலாம்.
கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார். பவர் பிளேவை அஸ்வின் சரியாக போடுவது இல்லை என்பதால் இன்று நடந்த மேட்சில் பவர் பிளேவில் அவரை கொண்டு வரவில்லை.
அது சரியான முடிவு என்று பார்த்தால்.. அதற்காக வேறு ஸ்பின் பவுலரையும் பவர் பிளேவிலும் கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுத்தார்.
குறைந்தபட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. முகேஷுக்கு 2 ஓவர்கள் மட்டும் தொடக்கத்தில் கொடுத்து ஸ்பின் பவுலர்களை முன்பே இறக்கி கோட்டாவை முடித்து இருந்தால் கடைசியில் முகேஷுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அவர் போட்ட 19வது ஓவரில் தேவையின்றி சிக்ஸ், பவுண்டரி சென்று ஆட்டம் மாறியது.

ருத்துராஜ் செய்த தவறால் கடைசி 4 ஓவர்களில் தரமான பவுலிங் போட சரியான பவுலர்கள் இல்லாத நிலை இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா போன்றவர்களை கூட 4 ஓவர்கள் போடாமல் நிறுத்தியது மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது இன்று ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக அவர் போடும் ஆப் ஸ்பின் சரியாக இல்லை. அதிகமாக கேரம் பால் போடுகிறார். முக்கியமாக பவர் பிளேவை சொதப்புவதே அவர்தான். பேட்டிங்கிலும் சரியாக ஆடுவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
முகேஷுக்கு பதிலாக அணியில் அன்ஷுல் காம்போஜை எடுத்திருக்கலாம். அவர் உயரமான, வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தனது பவுலிங் மூலம் இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அலைகளை உருவாக்கி வருகிறார். பிப்ரவரி 2022 இல் திரிபுராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி ஆட்டத்தில் உள்நாட்டு போட்டிகளில் முதல்முறையாக அறிமுகமானார். 2023-24 விஜய் ஹசாரே சீசனில் 10 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். அந்த சீசனில் ஹரியானா வெற்றிபெற காரணமாக இருந்தார்.
நவம்பர் 2024 இல், அன்ஷுல் காம்போஜ், கேரளாவுக்கு எதிராக ரஞ்சி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்தார். 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார், மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2025 ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அன்ஷுல் கம்போஜ் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் முகேஷுக்குத்தான் வாய்ப்பு கொடுப்போம் என்று கேப்டன் பிடிவாதமாக இருந்தது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications