மிடில் ஆர்டர் சர்ரென சரிய.. ஹார்ட் பீட் எகிற.. சிஎஸ்கே மும்பையை வீழ்த்தியது எப்படி? அந்த 7 காரணங்கள்
சென்னை: நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் 2025 தொடரின் 3வது லீக் ஆட்டம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. பரம வைரியான மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி சிஎஸ்கே இந்த மேட்சில் வென்றது.. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பின் 7 முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - பக்காவான பவர் பிளே
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் சிஎஸ்கே அணி பவர் பிளேவை சரியாக பயன்படுத்திக்கொண்டது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய விதம் கவனம் பெற்றது. தொடக்கத்திலேயே கலீல் அஹமது ஓவரில் ரோஹித் சர்மா அவுட் ஆனார். அவர் டக் அவுட் ஆன நிலையில் அந்த ஓவருக்கும் அடுத்த ஓவரிலேயே ரியான் ரிக்கல்டன் விக்கெட்டை கலீல் எடுத்தார். அவரிடம் எனர்ஜி ஷிப்ட் தெரிந்தது. இது மும்பை அணியை திணற வைத்தது.
காரணம் 2 - சிஎஸ்கே சிறப்பான பவுலிங்
சென்னை பிட்சை ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர். முக்கியமாக அஸ்வின் - நூர் - ஜடேஜா எதிரணிக்கு கடுமையாக பிரஷர் போட்டனர். அதோடு அஸ்வின் இடையே வந்து வில் ஜாக்ஸ் விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு பல வருடங்களுக்கு பின் போட்ட முதல் ஓவரிலேயே அஸ்வின் விக்கெட் எடுத்தது கவனிக்கப்பட்டது. முக்கியமாக மிடில் ஆர்டரை நூர் அஹமது அப்படியே பதம் பார்த்தார். 10 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணியை துவம்சம் செய்தார்.

காரணம் 3 - நூர்
சென்னை பிட்ச் ஸ்பின் பிட்ச் என்பதால்தான் நூர் எடுக்கப்பட்டார். அதன்படியே இன்று 87-4 (சூர்யகுமார் யாதவ், 10.3), 95-5 (ராபின் மின்ஸ், 12.4), 96-6 (திலக் வர்மா, 12.6), 118-7 (நமன் திர், 16.1) ஆகிய முக்கியமான விக்கெட்டுகளை அவர் எடுத்து அசத்தினார். இன்று பவுலிங்கில் சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் அவர்தான்.
காரணம் 4 - தோனி வழிகாட்டுதல்
ருத்துராஜ் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அதோடு இல்லாமல் தோனி ருத்துராஜை வழிநடத்திய விதம்.. பீல்டர்களை நிற்க வைத்த விதம் கவனிக்கப்பட்டது. தோனியிடமும் பழைய வேகம் அப்படியே இருந்தது. 11 ஓவரில் இன்று நூர் பவுலிங் செய்த போது கீப்பிங்கில் தோனி கொஞ்சம் சொதப்பினார். ஆனால் அதே ஓவரிலேயே சூர்யகுமார் யாதவை தோனி ஸ்டம்பிட் செய்தார். அதிலும் 1 நொடிக்கும் குறைவாக.. மில்லி செகண்ட் வேகத்தில் தோனி அந்த ஸ்டம்பிட்டை எடுத்தார்.
காரணம் 5- இலக்கு குறைவு
மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 20 ஓவரில் மும்பை அணி 155/9 ரன்கள் எடுத்தது. சென்னை பிட்சில் இன்னும் அதிக ரன்கள் அடிக்க முடியும். அதோடு பனி வரும் பட்சத்தில் இன்னும் கூடுதல் ரன்களை எடுக்க முடியும்.
காரணம் 6 - சிஎஸ்கே வேகம்
சிஎஸ்கே அணி தொடக்கத்திலேயே டாப் கியரில் போனது. தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் விளாசினார். வெறும் 26 பந்தில் 53 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்தார். இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சிவம் துபே, சாம் கரண் என்று இறங்கிய எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.
காரணம் 7 - ரச்சின் அசத்தல்
அணியின் சரிவை உணர்ந்த ரச்சின் ரவீந்திரா தொடக்கத்தில் வேகமாக ஆடியவர் கியரை குறைத்து நிதானமாக ஆடினார். நேற்று 45 பந்தில் ரச்சின் நிதானமாக அடித்த 65 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. கடைசியில் ரச்சின் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே எளிதாக 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து மும்பையை வீழ்த்தி வென்றது.












Click it and Unblock the Notifications