ஆர்சிபி, குஜராத்திற்கு கொண்டாட்டம்.. சிஎஸ்கே-வுக்கு திண்டாட்டம்.. பரபரக்கும் ஐபிஎல் களம்
சென்னை: ஐபிஎல் லீக் சுற்று இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. டாப் 4 இடங்களுக்கு இப்போது 6 டீம்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் பெங்களூர் மற்றும் ஆர்சிபி அடுத்த சுற்றுக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற இரு இடங்களுக்குத் தான் போட்டி உச்சத்தில் இருக்கிறது. மற்ற டீம்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு எவ்வளவு சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
ஐபிஎல் 2026 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே-ஆஃப் ரேஸ் ஒரு த்ரில்லர் சினிமா போல நகர்கிறது. ராய்ப்பூரில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலியின் 9வது ஐபிஎல் சதத்தால் (105 ரன்கள்) ஆர்சிபி அபார வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியால் ப்ளே-ஆஃப் வாய்ப்புகள் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது..

ஐபிஎல்
இப்போது ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் 16 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளது. ஹைதராபாத் 3வது இடத்தில் உள்ள நிலையில், பஞ்சாப் அணி 4வது இடத்தில் இருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரைட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணி 6வது இடத்தில் இருக்கிறது. இந்த 6 அணிகளுக்கும் இடையே தான் போட்டி மிக கடுமையாக இருக்கிறது.
ப்ளே ஆப் சுற்று
எந்தவொரு அணியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட பெங்களூர் மற்றும் குஜராத் கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்குச் செல்வது உறுதியாகிவிட்டது. அடுத்து ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் சிஎஸ்கே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற 41.7% வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. இது ராஜஸ்தான் ராயல்ஸை (40.6%) விடச் சற்றே அதிகம் என்றாலும், டாப் 4 இடங்களுக்குள் நுழைய இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே டூ ஆர் டை ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
அணிகளின் 'சான்ஸ்' பர்சன்டேஜ்
- குஜராத் டைட்டன்ஸ்: 94.8% (கிட்டத்தட்ட உறுதி!)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 92.6% (கிட்டத்தட்ட உறுதி!)
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் : 64.7% (வாய்ப்பு அதிகம்)
- பஞ்சாப் கிங்ஸ் : 62.8% (வாய்ப்பு அதிகம்)
- சென்னை சூப்பர் கிங்க்ஸ: 41.7% (வாய்ப்பு குறைவு)
- ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): 40.6% (வாய்ப்பு குறைவு)
வெறும் 1% வாய்ப்பு
மறுபுறம் மும்பை மற்றும் லக்னோ அணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. கொல்கத்தா அணிக்கு வெறும் 1.8% வாய்ப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. டெல்லி அணிக்கு 1% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. இந்த இரு அணிகளும் தங்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும். மேலும், மற்ற டீம்களின் போட்டிகளும் இவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும்.
இதற்கிடையே நேற்றைய போட்டியில் கிங் கோலி அதிரடியாகச் சதமடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் (423 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்து, அதிவேகமாக (409 இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஐபிஎல்-லில் 10 சதங்களுடன் டேவிட் வார்னருடன் இணைந்திருக்கிறார் கோலி.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications