வந்தே பாரத் ரயில் மூலம் பத்திரமாக டெல்லி வந்த ஐபிஎல் வீரர்கள்.. ஒரு வாரத்துக்கு போட்டிகள் சஸ்பெண்ட்!
டெல்லி: மே 8 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி பாகிஸ்தானின் தாக்குதல்களால் கைவிடப்பட்டதை அடுத்து, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்கள் தர்மசாலாவிலிருந்து டெல்லிக்கு வந்தனர். அவர்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை பொறுக்க மாட்டாமல் ஆத்திரத்தில் இந்தியா மீது டிரோன் தாக்குதலை ஏவி வருகிறது பாகிஸ்தான். அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையே, ஹிமாசலின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் -தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி நேற்று (மே 8) பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 11வது ஓவரில் ஆட்டம் கைவிடப்பட்டது
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக மைதானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இரு அணி வீரர்களும், ஸ்டேடியத்தில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் அனைவரும் டெல்லியை வந்தடைந்துள்ளனர்.
போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications