கார்த்திக் சர்மா அல்லது உர்வில் படேல்? சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே இடத்தில் யாருக்கு வாய்ப்பு?
மும்பை: சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் ஆயுஷ் மாத்ரேவின் இடத்தில் உர்வில் படேல் அல்லது கார்த்திக் சர்மா ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியின் போது, சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, இடது காலின் தொடைப் பகுதியில் (Left Hamstring) காயமடைந்தார். வேகமாக ரன்கள் ஓட முயன்றபோது ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவர் வலியால் துடித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் 6 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது சிஎஸ்கே நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் 6 போட்டிகளில் ஆடிய ஆயுஷ் மாத்ரே, 201 ரன்களை குவித்திருந்தார்.
இதனால் ஆயுஷ் மாத்ரேவின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடத்தில் விளையாட சிஎஸ்கே அணி நிர்வாகிகள் 2 வீரர்களில் யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவருமே நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடக் கூடியவர்கள்.
கடந்த ஐபிஎல் 2025 சீசனில், இவர் காயம் காரணமாக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 3 போட்டிகளில் 68 ரன்களை மிக அதிரடியாக 212.5 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அசத்தினார். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். ஆயுஷ் மாத்ரே ஆடிய அதே பாணியிலான ஆட்டத்தை இவரால் வெளிப்படுத்த முடியும்.
அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தின் போது 14.5 கோடி ரூபாய் என்ற பெரிய தொகைக்கு ஏலம் எடுத்த வீரர் கார்த்திக் சர்மா. இவர் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 25 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திறமையான வீரர் என்பதால், டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications