மீண்டும் சிஎஸ்கே வீரரை வாங்கிய மும்பை அணி.. சைலண்ட் சம்பவம் செய்த அம்பானி.. உளறிக் கொட்டிய அஸ்வின்!
மும்பை: சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில், மும்பை அணி சைலண்ட்டாக ஒரு டிரேட் டீலை முடித்துள்ளது. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக ஆடிய ஷர்துல் தாக்கூரை ரூ.2 கோடிக்கு மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கியுள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் நடக்கவுள்ளது. இதனால் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தங்களால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். அத்துடன் டிரேட் செய்வதற்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் டிரேட் செய்யலாம் என்றாலும், எந்த அணியிடமும் பர்ஸில் பணம் இருக்காது.

இதனால் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்திருக்கிறது. ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனையும், சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் இரு அணிகளும் டிரேட் செய்ய உள்ளனர். சிஎஸ்கே அணியின் ஐகானிக் வீரர்களில் ஒருவரான ஜடேஜா டிரேட் செய்யவிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஒப்பந்தம் கையெழுத்திட சில தாமதம் ஏற்பட்டுள்ளதால், இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் சஞ்சு சாம்சனின் உடற்பயிற்சி ஆலோசகர் ராஜாமணி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்வதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.
குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியதை விடவும், இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா 12 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார்.
இந்த டிரேட் டீல் ஒருபுறம் இருக்க, மும்பை அணி சைலண்ட்டாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதாவது லக்னோ அணிக்காக கடந்த சீசனில் மாற்று வீரராக வாங்கப்பட்ட ஷர்துல் தாக்கூரை மும்பை அணி ரூ.2 கோடிக்கு டிரேட் மூலமாக வாங்கியுள்ளது. தீபக் சஹர் தொடர்ச்சியாக காயம் அடைய வாய்ப்பு உள்ளதால், அவருக்கான மாற்று வீரராக ஷர்துல் தாக்கூரை பயன்படுத்திக் கொள்ள முடிவு எடுத்துள்ளது.
ஏற்கனவே பும்ரா, தீபக் சஹர், அஸ்வனி குமார் ஆகிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், சொந்த மண்ணைச் சேர்ந்த ஷர்துல் தாக்கூரையும் மும்பை அணி வாங்கி இருக்கிறது. இதனால் மும்பை அணியின் பலம் கூடுதல் வலிமை பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் உளறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications