இந்தியாவிடம் தோல்வி.. இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான சாதனை படைத்த பாகிஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில், நேற்று கொழும்பு மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி மோசமாக தோற்று போனது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சொல்லிக்கொள்ளும்படியான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். எனவே தங்கள் நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணிகளும் தீவிரமாக விளையாட வேண்டிய நெருக்கடியில் இருந்தன. இந்த மேட்சில் டாஸ் வென்றது பாகிஸ்தான்தான். இருப்பினும், பேட்டிங்கை இந்திய அணியிடம் கொடுத்தது. அப்படி செய்திருக்க கூடாது என்பதை பாகிஸ்தான் கடைசியில்தான் உணர்ந்தது.

Pakistan

இந்தி அணியின் சார்பில் களமிறங்கிய இஷான் கிஷன், 77 ரன்கள் குவிக்க இந்தியா 175/7 எடுத்தது. இந்த இலக்கை எளிதில் துரத்தி பிடித்துவிடலாம். ஆனால், அதற்கு முறையான திட்டமிடல் அவசியம். ஆனால் பாகிஸ்தான் அணியிடம் அது இல்லை. எனவே இந்திய பந்துவீச்சாளர்கள் பாக்., அணியை திக்குமுக்காட வைத்துவிட்டனர். அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 114 ரன்களுக்குச் சுருண்டது.

பாகிஸ்தானின் இந்த ஸ்கோர், சமீபகால டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அவர்கள் எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர்களில் ஒன்றாகும். 2026 உலகக் கோப்பைத் தொடரில் முக்கியமான கட்டத்தில் இந்தியாவிடம் தோற்றதன் மூலம், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. போட்டியின் முதல் 2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது, அந்த அணியின் மோசமான பேட்டிங் சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மறுபுறம் இந்திய அணி, சிற்பபான பேட்டிங்கை கொடுத்தது. இஷான் கிஷன் பாகிஸ்தானுக்கு எதிராக 27 பந்துகளில் அரைசதம் கடந்து, உலகக் கோப்பையில் அதிவேகமாக ரன் குவித்த இந்திய வீரர்களில் ஒருவராகச் சாதனை படைத்தார்.

அதேபோல சூர்ய குமார் யாதவ், கேப்டனாகத் தனது முதல் உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் மோதலிலேயே 61 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

என்னதான் இந்த மேட்சில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றிருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படியான சாதனையை அந்த அணி படைத்திருக்கிறது. அதாவது மேட்ச் நடந்த கொழும்பு மைதானம், உலர்ந்து காணப்பட்டதால் அது வேகபந்து வீச்சாளர்களை விட, சுழற்பந்து வீச்சாளர்களுக்குதான் அதிக பலனை கொடுக்கும் என்பதை அந்த அணியின் கேப்டன் உணர்ந்திருந்தார்.

எனவே, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, இந்தியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் 18 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டே வீசச் செய்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில், ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி அதிகப்படியான ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசிய சாதனையை பாகிஸ்தான் இப்போது சமன் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும், இதே கொழும்பு மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் சுழற்பந்து வீசியிருந்தது. 14 ஆண்டுகள் கழித்து அதே சாதனையை அதே மைதானத்தில் பாகிஸ்தான் மீண்டும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+