சஞ்சு சாம்சன் மீது இவ்வளவு வன்மமா.. மாட்டிக்கொண்ட சுப்மன் கில்.. வெளுத்து கட்டும் ரசிகர்கள்!
மும்பை: இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்திய பதிவில் சஞ்சு சாம்சனின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டு சர்ச்சையில் மாட்டியுள்ளார். இதையடுத்து சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணியின் ரசிகர்களும் சுப்மன் கில்லை வெளுத்து கட்டி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலமாக 3வது முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து தொடர்ச்சியாக 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது.

97, 89, 89 என்று தொடர்ச்சியாக 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் எந்தவித சுயநலமான இன்னிங்ஸையும் விளையாடாமல் இந்திய அணியின் வெற்றியை முக்கியமாக கொண்டு விளையாடினார். இதன் காரணமாகவே மற்ற வீரர்களாலும் கூடுதலாக ரன்களை சேர்க்க முடிந்தது. அதேபோல் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடிய போது இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மாவும் இன்னும் சிறப்பாக விளையாடினர்.
இதையடுத்து சஞ்சு சாம்சனின் திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 11 ஆண்டுகளாக இந்திய அணிக்கு நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற சஞ்சு சாம்சனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று ரசிகர்கள் பலரும் கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்திய அணிக்கு ஒரு வாழ்த்து பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவுடன் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ஆனால் அதே புகைப்படத்தை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பும்ராவுக்கு பின் சஞ்சு சாம்சன் நிற்பது நன்றாகவே தெரிகிறது. இதன்பின் சுப்மன் கில்லின் புகைப்படத்தை ஆய்வு செய்த போது, சஞ்சு சாம்சனின் முகம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
Champions🏆🏆🏆🇮🇳🇮🇳 pic.twitter.com/viDQNN8ppQ
— Shubman Gill (@ShubmanGill) March 8, 2026
ஆனால் பும்ராவுக்கு பின் ஒரு கால் இருப்பது நன்றாக தெரிகிறது. இதனால் சஞ்சு சாம்சன் மீதான வன்மத்தை சுப்மன் கில் தனது வாழ்த்து பதிவில் இறக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால் தொடக்க வீரராக சுப்மன் கில் ஆடிய இடத்தில் தான் சஞ்சு சாம்சன் இறங்கி சாதித்துள்ளார். சுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
Not just a team. A family.
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 8, 2026
Not just a trophy. A dream for a billion of us.
PROUD to lead this group, PROUD to represent my India 🇮🇳🏆 A huge thank you to everyone standing beside me. You are the pillars of my strength 💙🙌🏼🫶🏻 pic.twitter.com/1fZ1DH3o5M












Click it and Unblock the Notifications