எம்மாடி.. இவ்வளவு பெரிய பரிசுத்தொகையா.. டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
மும்பை: டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.14.65 கோடி பரிசாக அளிக்கப்பட உள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடக்கவுள்ளதால், இந்திய ரசிகர்களிடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2023 உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா அணி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு மொத்த மைதானத்தையும் சைலண்ட் செய்தனர்.

அதேபோல் நியூசிலாந்து அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கடினமான பிட்ச்களில் விளையாடி இருப்பதால், இந்த மைதானம் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை குறித்த விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.27.48 கோடியாக பரிசாக வழங்கப்படும்.
அதேபோல் இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ.14.65 கோடி பரிசாக அளிக்கப்படும். அதேபோல் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு தலா ரூ.7.94 கோடி கிடைக்கும். சூப்பர் 8 சுற்றில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு தலா ரூ.3.48 கோடி கிடைக்கும்.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 20 அணிகளுக்கு குறைந்தபட்ச பரிசுத் தொகையாக ரூ.2.29 கோடி பரிசாக கிடைக்கும். உலகக்கோப்பை தொடருடன் ஒப்பிடும் போது, பரிசுத்தொகை கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும், ஐசிசியின் இந்த அறிவிப்பு பல்வேறு அணிகளுக்கு ஆச்சரியமாக அமைந்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்றது கிடையாது. தொடர்ந்து 2 முறை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. இருந்தாலும் ஒரு இறுதிப் போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளன. இதனால் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications