சிவம் துபே அவுட்.. குல்தீப் யாதவ் இன்.. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி?
கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிவம் துபே நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது இடத்தில் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான போட்டியில் யார் வெல்கிறார்களோ, அந்த அணியும் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இதனால் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டியாக இது அமைந்துள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்க உள்ள போட்டி என்பதால், ஸ்பின்னர்களுக்கு கூடுதல் சாதகம் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியாது.
இதன் காரணமாக கடந்த 2 போட்டிகளாகவே சிவம் துபே பவுலிங் சொதப்பி வருவதால், அவரை இந்திய பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவம் துபே இடத்தில் ஸ்பின்னரான குல்தீப் யாதவை சேர்க்க தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் பிளேயிங் லெவனில் ஒரேயொரு மாற்றம் மட்டும் இருக்கும் என்று தெரிகிறது. ரிங்கு சிங்கை பொறுத்தவரை தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றவிட்டு, இன்று இரவு இந்திய அணியுடன் மீண்டும் இணைய உள்ளார். ஆனால் ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்த்தால், அக்சர் படேல் அல்லது சிவம் துபேவை நீக்க வேண்டிய சூழல் வரலாம்.
இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்து இந்திய அணி களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் அதிக ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால், பும்ராவின் பொறுப்பு அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications