தயவு செய்து பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுங்கள்.. இல்லனா வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை தடுக்க முடியாது!
கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பும்ரா பவர் பிளேவில் பவுலிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார். பவர் பிளேவின் கடைசி இரு ஓவர்களில் பும்ரா பவுலிங் செய்வதற்கு முன்பாகவே தொடக்க வீரர்களில் செட்டிலாகிவிட்டால், அது மிகப்பெரிய பின்னடைவாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இதனால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்திருக்கிறது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் வலிமையாக ஆடி வருகிறது.

குறிப்பாக ஹெட்மயர் மற்றும் ஹேசல் ஹோல்டர் ஆகியோர் எந்த சூழலில் இருந்து அணியை மீட்கும் வல்லமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பவுலிங்கில் மோட்டி, ஹோல்டர், ரோச் ஆகியோரை சமாளிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை. எவ்வளவு பெரிய இலக்கு என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எளிய ஒன்றுதான்.
இதனால் இந்திய அணி பவுலர்கள் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுக்க வேண்டும். கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் வருண் ஆரோன் பேசுகையில், எனக்கு பும்ரா அட்டாக்கை தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க முடியும்.
ஆனால் பும்ரா அட்டாக்கில் விரைவாக வராததால், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் செட்டிலாகிவிட்டது. ஒருவேளை பும்ரா முன்னதாக கொண்டு வரப்பட்டிருந்தால், அவர்கள் தடுமாறி இருப்பார்கள். பவர் பிளேவின் 5 அல்லது 6வது பும்ரா அட்டாக்கில் வருவதால், எந்த பிரயோஜனும் இல்லை. அந்த ஓவர்களில் பெரிதாக ஸ்விங்கும் கிடைக்காது.
அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட கூடாது. தொடக்கத்தில் இடது - வலது காம்பினேஷனுடன் களமிறங்க வேண்டும். ஏனென்றால் அபிஷேக் சர்மாவை ஆஃப் ஸ்பின்னர்கள் தடுமாற வைக்கிறார்கள். ரிங்கு சிங் வெளியில் அமர தேவையில்லை தான். ஆனால் சில நேரங்களில் காம்பினேஷனும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications