IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை!
சென்னை: 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து சாதனை படைத்த இந்திய அணி, நியூலாந்து அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 3வது முறையாகவும் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்பேசிய நிலையில், பேட்டாலும் பந்தாலும் பதில் கொடுத்திருக்கிறது இந்தியப் படை.
2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் திரண்ட நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை துல்லியமாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை குவித்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரைக் கணிசமாக உயர்த்தினார். அவருடன் இணைந்து விளையாடிய இஷான் கிஷன் 54 ரன்கள் குவித்து அணியின் ரன் வேகத்தை தொடர்ந்து உயர்த்தினார்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணியும் இதற்கு முன்பு இவ்வளவு அதிக ரன்கள் எடுத்ததில்லை. எனவே இந்த 255 ரன்கள் புதிய சாதனையாக பதிவானது. இதனைத் தொடர்ந்து 256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் போராடினர். இடைவிடாமல் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்தது.
இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ( Mitchell Santner ) பேசியிருந்த கருத்து ரசிகர்களை கோபப்படுத்தியிருந்தது. பிரஸ் மீட்டில் பேசிய அவர் பேசியபோது, "நிச்சயமாக இறுதிப்போட்டி ஒரு சவாலாக இருக்கும். நாங்கள் கோப்பை வெல்லும் பிரதான அணியாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அணியாக ஒன்று சேர்ந்து சிறப்பாக செயல்பட்டால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு முறை கோப்பையை வெல்வதற்காக சிலரின் இதயங்களை உடைப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு" என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதச், "எல்லோரும் ஒரே மாதிரி வார்த்தைகளை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். புதிதாக ஏதாவது சொல்லுங்கள்" என்று சிரிப்புடன் பதிலடி கொடுத்திருந்தார்.
இறுதியில் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. நியூசிலாந்து கேப்டன் கூறியிருந்த "உள்ளூர் ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்" என்ற பேச்சுக்கு பதிலடியை, இந்திய வீரர்கள் தங்களது ஆட்டத்தின் மூலம் வழங்கியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications