Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

42 பந்துகளாக வராத பவுண்டரி.. டென்ஷனில் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலி.. ஜஸ்ட் மிஸ்ஸான ரெக்கார்ட்!

Subscribe to Oneindia Tamil

ராஜ்கோட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 29 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறிய பின், ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இதனால் பிரஷர் அதிகரிக்க, விராட் கோலி 23 ரன்களில் போல்டாகி நடையை கட்டி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா நிதானமாக விளையாட, பவுண்டரிகள் வருவதற்கே தாமதம் ஏற்பட்டது.

Virat Kohli

இதனால் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 47 பந்துகளில் அரைசதம் எட்டினார். ஆனால் அதிரடியாக விளையாட முயன்ற அவர், 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி மீது பிரஷர் எகிறியது.

இன்னொரு பக்கம் விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறியது. டாட் பால்கள் அதிகரித்த போது, கிளார்க் பந்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க முனைப்பு காட்டினார். ஆனால் திடீரென இன்சைட் எட்ஜாகி விராட் கோலி 23 ரன்களில் நடையை கட்ட வேண்டிய நிலை உருவாகியது. 7 ஓவர்களாக பவுண்டரி அடிக்க முடியாததால், விராட் கோலியை இயல்பாக பிரஷர் தொற்றிக் கொண்டது.

இதனால் 16.4 ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 23.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதற்கு பவுண்டரிகள் தடுக்கப்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியாக ஆடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி குறைந்தது அரைசதமாவது அடித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் தொடர்ந்து 6 அரைசதங்கள் அடித்ததில்லை.

இதனால் விராட் கோலி புதிய வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலியின் விக்கெட் காரணமாக நியூசிலாந்து அணியின் கைகள் இந்த ஆட்டத்தில் ஓங்கி இருக்கிறது. இதனால் முழு பொறுப்பும் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் - ஜடேஜா மீது விழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+