Virat Kohli: பவர் பிளேவுக்கு பின் வண்டி ஓடாது.. வேலையை காட்டிய விராட் கோலி.. பாவம் ரஜத் பட்டிதார்!
பெங்களூர்: ஆர்சிபி அணியின் சீனியர் வீரரான விராட் கோலி பவர் பிளே ஓவர்களுக்கு பின் ரன்கள் சேர்க்க தடுமாறி வருவது தொடர் கதையாகி இருக்கிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் கூட 20 பந்துகளுக்கு 40 ரன்கள் சேர்த்த விராட் கோலி, பவர் பிளேவுக்கு பின் 14 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆர்சிபி அணி தரப்பில் ரஷிக் சலாம் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் விராட் கோலி இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடினார். பிரின்ஸ் யாதவ் வீசிய 2வது ஓவரிலேயே பில் சால்ட் போல்டாகி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் விராட் கோலி - படிக்கல் கூட்டணி இணைந்தது.
முகமது ஷமி வீசிய 3வது ஓவரில் விராட் கோலி ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன்பின் பிரின்ஸ் யாதவ் வீசிய 4வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால் விராட் கோலியின் கிளாசிக் ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் விராட் கோலியின் ஸ்கோர் 20 பந்துகளில் 40 ரன்களாக இருந்தது.
ஆனால் பவர் பிளேவுக்கு பின் விராட் கோலி ரன்கள் சேர்க்கவே தடுமாறினார். பவர் பிளேவுக்கு பின் 4 ஓவர்களாக விராட் கோலியால் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இதனால் படிக்கல் அட்டாக் செய்ய முயன்று 10 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் உடனடியாக அட்டாக்கை தொடங்கினார்.
இதையடுத்து 34 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஐபிஎல் தொடரில் விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் விராட் கோலி பவர் பிளே ஓவர்களுக்கு பின் ரன்கள் சேர்க்க தடுமாறுவது தொடர் கதையாகி வருகிறது.
இதனை ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கவனத்தில் கொள்வார் என்று தெரிகிறது. ஏனென்றால் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறிய போதே தினேஷ் கார்த்திக் நிதானமான சூழலை அனுமானித்தார். விராட் கோலியின் ஆட்டத்தால் ஆர்சிபி அணியின் ரன் ரேட் மிடில் ஓவர்களில் குறைந்து வருவது வரும் நாட்களில் பின்னடைவை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications