ஆபத்து! பாகிஸ்தான் மேட்சில் இந்தியா கண்முன் நிற்கும் முதல் சிக்கல்! இதை கிராஸ் பண்ணிட்டா! கேம் ஓவர்
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிராக நாளை இந்தியா ஆட உள்ள உலகக் கோப்பை 50 ஓவர் 2023 ஆட்டத்தில் இந்தியாவிற்கு முக்கியமான ஒரு சவால் உள்ளது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடந்த மேட்சில் தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததன் மூலம் ஆட்டம் புதிய பரபரப்பு கட்டத்தை அடைந்து உள்ளது. முக்கியமாக இந்த தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது. கடந்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்றாலும் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக ஆடும் ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி இந்தியா வென்றது. அதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக போட்டியிலும் இந்தியா எளிமையான வென்றது.

இந்த நிலையில்தான் நாளை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவிற்கு உள்ள சவால்கள் என்னென்ன.. யாரெல்லாம் ஆட வாய்ப்பு உள்ளது.. என்ன மாதிரியான மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். ஆடும் 11 பேர் கொண்ட அணி: இந்திய அணியில் நாளை இஷான் கிஷன் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. சுப்மான் கில் உடல்நிலை தேறி உள்ளார். அவர் இடதுகை பாஸ்ட் பவுலர்களை நன்றாக ஆட கூடியவர். அதனால் கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட வாய்ப்பு உள்ளது. இஷான் கிஷன் அப்படி இல்லை. அவர் இடதுகை பாஸ்ட் பவுலர்களிடம் கடுமையாக திணறுவார்.
அதனால் அவருக்கு பதில் கில் அணிக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் அஹமதாபாத் பிட்சில் அதிக ஆடிய ஷமி நன்றாக ஆடுவார் என்பதால் சிராஜ் நீக்கப்பட வாய்ப்புள்ளது. சிராஜ் இப்போது பார்மில் இல்லை. இரண்டு மேட்சிலும் அவரின் பவுலிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முக்கியமாக சரியான லைன் மற்றும் லென்தில் கூட அவர் பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில்தான் அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் மேட்சில் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
( ஆஸ்திரேலியா அவுட்? உலகக் கோப்பையில் இவங்க 4 பேர்தான் செமி பைனலிஸ்ட்? சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த நாடு )
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷமியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஷமி அணியில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. அந்த பிட்ச் குஜராத்தில் ஷமி ஐபிஎல் ஆடுகையில் அவருக்கு பிரபலமான பிட்ச். அங்கே நன்றாக அவர் விக்கெட்டும் எடுப்பார்.
அதேபோல் அஷ்வினை அணியில் எடுத்துவிட்டு ஷரத்துல் தாக்கூரை நீக்கும் வாய்ப்புகள் உள்ளன. அஸ்வினை பெரிதாக பாகிஸ்தான் இளம் வீரர்கள் ஆடியது இல்லை என்பதால் அவரை களமிறக்க வாய்ப்புகள் உள்ளன. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணியில் கில்,ரோஹித் , கோலி, கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா , ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

சவால்கள்: நாளை இந்திய அணிக்கு பின்வரும் சவால்கள் உள்ளன. இதில் முதல் சவாலை மட்டும் இந்திய அணி கடந்து விட்டால் போதும் பெரும்பாலும் வெற்றி உறுதியாகிவிடும்.
1. பாகிஸ்தான் இடது கை பவுலர்களை முதல் 10 ஓவருக்கு சமாளிக்க வேண்டும். அவர்கள் புது பந்தில் வேகமாக போடுவார்கள். நன்றாக ஸ்விங் ஆகும். இதை மட்டும் சமாளிக்க வேண்டும். பாகிஸ்தான் ஸ்பின் மோசம் என்பதால் அதை சமாளித்துவிடலாம்.
2. பாகிஸ்தானின் டாப் ஆர்டரில் உள்ள ரிஸ்வான், பாபர் உட்பட 4 வீரர்களை தொடக்கத்திலேயே விக்கெட் எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு சவால்களை கடந்துவிட்டாலே போதும்.. எளிதாக பாகிஸ்தான் அணியை நாளை வீழ்த்தி விடலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications