சிறப்பாக ஆடியும் தூக்கி அடிக்கப்படும் வீரர்? இந்திய அணியில் 2 பெரிய மாற்றம்? ரோஹித் கசப்பான முடிவு
சென்னை: இலங்கைக்கு எதிராக நாளை மறுநாள் இந்தியா ஆட உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா கசப்பான 2 முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் பூனையாக இருந்த சில அணிகள் தற்போது புலியாக மாறி உள்ளன. ஆட்டோ கார மாணிக்கமாக இருந்த சில அணிகள் தற்போது மாணிக் பாட்ஷாவாக மாறிவிட்டன. உதாரணமாக டேபிளில் கடைசியில் இருந்த ஆஸ்திரேலியா அடித்து மேலே வந்து 4ம் இடத்தை பிடித்துள்ளது.
இன்னொரு பக்கம் இந்த சீசனில் கலக்கி வரும் ஆப்கானிஸ்தான் 5ம் இடத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்து ஆப்கானிஸ்தான் செமி பைனல் வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்தியா வெற்றி: 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இதையடுத்து கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகவும் வென்றது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
அணி மாற்றம்: இந்த நிலையில்தான் இலங்கைக்கு எதிராக நாளை மறுநாள் இந்தியா ஆட உள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா கசப்பான 2 முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா காயம் அடைந்தார்.
ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்த போது அவர் காலால் பந்தை தடுக்க முயன்றார். அப்போது தடுக்கி விழுந்த ஹர்திக் பாண்டியா இன்னொரு கால் மேல் மடங்கி அமர்ந்தார். இதில் அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து துடித்த ஹர்திக் பாண்டியா ஆ.. ஆ என்று கத்தினார். அதன்பின் மைதானத்திற்குள் வேகமாக பிசியோ ஓடி வந்தார். அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கேயே அவருக்கு காலில் கட்டு போடப்பட்டது. கட்டு மேல் கட்டு போடப்பட்டது .
கடைசியில் அவர் கட்டு போட்டு மீண்டும் பவுலிங் போட வந்தார். அதன்பின் ஓடி போய் பவுலிங் போட ஹர்திக் முயன்றார். ஆனால் அவரால் ஓட முடியவில்லை. இதனால் மீதம் இருந்த பந்துகளை கோலி போட்டார். அதோடு ஹர்திக் பாண்டியா உடனே மைதானத்தை விட்டு வெளியே சென்றார்.
ஹர்திக் பாண்டியா: இதை அனைத்தையும் அதிர்ச்சியோடு ரோஹித் பார்த்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் காலில் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் ஓய்விற்கு பின் மீண்டும் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் ஆடும் வாய்ப்புகள் உள்ளனர். அவர் காயம் காரணமாக அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டார். கூடுதல் பேட்ஸ்மேன் வர வேண்டும் என்று சூர்யா குமார் யாதவ் உள்ளே கொண்டு வரப்பட்டார்.
அதேபோல் ஷமி அணிக்குள் எடுத்து வரப்பட்டார். இந்த நிலையில்தான் ஹர்திக் உள்ளே வருவதால் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.
மாற்றம் 1 வாய்ப்பு - ஹர்திக் மட்டும் உள்ளே கொண்டு வரப்பட்டு சூர்ய குமார் யாதவ் மட்டும் நீக்கப்படலாம் அப்படி செய்யப்பட்டால் ஷமி , சிராஜ், ஹர்திக், ஜடேஜா, குல்தீப், பும்ரா என்று 6 பவுலர்கள் இருப்பார்கள்.
மாற்றம் 2 வாய்ப்பு - ஹர்திக் உள்ளே கொண்டு வரப்பட்டு சூர்ய குமார் யாதவ் நீக்கப்படாமல் சிராஜ் அல்லது ஷமி நீக்கப்படலாம் அப்படி செய்யப்பட்டால் ஷமி அல்லது சிராஜ், ஹர்திக், ஜடேஜா, குல்தீப், பும்ரா என்று 5 பவுலர்கள் இருப்பார்கள். ஆனால் கூடுதல் பேட்டிங் இருக்கும்.

இனி நடக்கும் போட்டிகள் சிராஜுக்கு சாதகமான பிட்ச் கொண்ட பெங்களூர் போன்ற மைதானங்கள் ஆகும். இதனால் அவரை வைத்துகொண்டு நன்றாக ஆடும் ஷமி நீக்கப்படுவாரா? அல்லது சிராஜ் நீக்கப்படுவாரா அல்லது கடந்த மேட்சில் இக்கட்டான நேரத்தில் 40+ அடித்த சூர்யா குமார் நீக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications