செமி பைனலில் நுழையும் அந்த அணி.. இந்தியாவை நெருங்கிய பெரும் கண்டம்.. பழசெல்லாம் கண்ணு முன்னாடி வருதே
சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஆஸ்திரேலியா அணி வென்றதால் செமி பைனல் கணக்கு மொத்தமாக மாறி உள்ளது. இந்திய அணிக்கும் செமி பைனலில் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
நேற்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டது.

முக்கியமாக இப்ராஹிம் சத்ரான் தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடினார். சச்சின் ஸ்டைலில் இவர் ஆடிய சில ஷார்ட்டுகள், ஆங்கர் இன்னிங்ஸ் பெரிய அளவில் கவனம் பெற்றது. 129 ரன்களை இவர் 143 பந்துகளில் எடுத்தார். 8 பவுண்டரி 3 சிக்ஸ் அடித்தார். அதன்பின் கடைசியில் வந்த ரஷீத் கான் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 18 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை அதிர வைத்தார் .
இதன் மூலம் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 291-5 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மேக்ஸ்வெல் அதிரடி: இதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மேக்ஸ்வெல் மட்டும் கடைசிவரை நின்று ஆடிய 201 ரன்கள் எடுத்தார். 128 பந்தில் 21 பவுண்டரி , 10 சிக்ஸர் என்று இவர் ஆடிய ருத்ர தாண்டவம்தான் நேற்று ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றியது.
மற்ற எந்த வீரரும் 30 ரன்கள் கூட தாண்டாத நிலையில் 201 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார்.
செமி பைனல்: ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றி செமி பைனல் வாய்ப்புகளை மாற்றி உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் செமி பைனல் ரேசில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. அந்த அணிக்கு 14 சதவிகிதம் மட்டுமே செமி பைனல் சான்ஸ் உள்ளது. 40 சதவிகிதம் பாகிஸ்தான் அணிக்கும், 44 சதவிகிதம் நியூசிலாந்து அணிக்கும் செமி பைனல் சான்ஸ் உள்ளது.
செமி பைனலில் ஆஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. இதனால் இரண்டு அணிகளில் ஒரு அணிதான் பைனல் வரப்போகிறது . இப்போது இந்திய அணிக்கு 2 பிரச்சனை, இரண்டு நல்ல செய்தி உள்ளது.
பிரச்சனை 1 - செமி பைனலில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் சான்ஸ் உள்ளது . புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள அணியை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். 2019ல் செமி பைனலில் இந்தியா நியூஸிலாந்திடம் தோற்றது. நன்றாக ஆடிய இந்தியா 3 மணி நேர மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தது. அந்த கண்டம் மீண்டும் நம்மை தேடி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிரச்சனை 2 - நாம் ஒருவேளை வென்று பைனல்ஸ் சென்றாலும் கூட.. செமி பைனலில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. பைனலுக்கு ஆஸ்திரேலியா வந்தால் அதுவும் பெரிய கண்டம்தான். ஏனென்றால் பைனலில் ஆஸ்திரேலியாவை அடிப்பது என்பது மிக மிக கடினமான விஷயம் ஆகும்.
நல்ல விஷயம் 1 - ஒருவேளை பாகிஸ்தான் அணி செமி பைனலுக்குள் நுழைந்தால்.. இந்தியா எளிதாக அவர்களை அடித்து பைனல் செல்ல முடியும். நியூசிலாந்து - பாகிஸ்தான் மேட்ச்தான் இதை உறுதி செய்யும்.
நல்ல விஷயம் 2 - செமி பைனலில் ஆஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. அதில் ஒருவேளை தென்னாபிரிக்கா வென்று, பைனல் வந்தால்... இந்தியா பைனலில் அவர்களை எதிர்கொள்ளும் பட்சத்தில் எளிதாக வெற்றிபெற முடியும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications