பதற்றம் தந்த பாடி லாங்குவேஜ்! நேற்று மேட்சில் கவனிச்சீங்களா? இந்திய அணியில் பெரிய ஷாக்!சரியில்லையே
சென்னை: நேற்று நேபாளத்திற்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றாலும் கூட ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை உலகக் கோப்பையில் எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மேட்ச் கண்டியில் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக முடிவு வராமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
17 பேர் கொண்ட அணி: ஏற்கனவே இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று நேபாளத்திற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்தனர். சிராஜ் 3 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது.
விக்கெட் இழக்காமல் ரோஹித் சர்மா 74, சுப்மான் கில் 67 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20.1 ஓவரில் 147-0 ரன்கள் எடுத்து வென்றது. மழை காரணமான ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி வென்றது.

குழப்பம்: நேற்று இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை மிஸ் செய்தனர். அழகாக கைக்கு வந்த கேட்சை கோலி உட்பட மிஸ் செய்தனர். பீல்டிங் செய்யவே தெரியாத வீரர்கள் மைதானத்தில் நிற்பது போல மோசமாக ஆடிக்கொண்டு இருந்தனர்.
அதன்பின் இந்திய அணியின் பாடி லாங்குவேஜும் மோசமாக இருந்தது. ஆட்டத்தின் மீது ஆர்வமே இல்லாமல் மிதப்பில் இருந்தது போல் ஆடிக்கொண்டு இருந்தனர். அதாவது எதோ இந்த தொடரில் ஏற்கனவே வென்றுவிட்டது போல ஆடிக்கொண்டு இருந்தனர். இந்திய அணியின் இந்த மிதப்பான ஆட்டம் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications