ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து டக்ளஸ் தேவானந்தா கடிதம்
யாழ்ப்பாணம்: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு இலங்கையின் ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம்:
உங்கள் மீது ஜோடிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீங்கள் விடுதலையாகி வந்திருப்பது குறித்து தமிழகமெங்கும் பெரு மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இந்த மகிழ்ச்சி தனியே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. உங்களது விடுதலையால் தமிழக மக்களை போல் இலங்கைத் தமிழ் மக்களின் மனங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றன.
உண்மைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. இந்த உயிருள்ள தத்துவத்தை உங்களது விடுதலை உலகத்தின் செவிகளுக்கு மறுபடி ஒரு முறை உரக்க சொல்லியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் உங்களது நேரடி பிரசன்னம் சில காலங்கள் இல்லையென்றாலும் தமிழக மக்களின் மனங்களை நீங்களே தொடர்ந்தும் ஆட்சி புரிந்து வந்திருக்கிறீர்கள்.
அது போல் ஈழத்தமிழ் மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கிறீர்கள். மீண்டும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் நீங்களே நேரில் உட்கார்ந்து, உங்களது நல்லாட்சியை தொடர மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீங்கள் எழுப்பி வந்த உரிமைக்குரல் தொடர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications