யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை.. பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ் வேட்பாளர்கள்!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் அனுர குமார திசநாய்யக்கவின் ஜேவிபி கட்சியின் வேட்பாளர்கள் அதிகளவிலான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருன்றனர். தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதிகளிலும், அதிபர் அனுர குமார திசநாய்யக்கவின் ஜேவிபி கட்சி இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆறு இடங்களுக்கு போட்டி நிலவுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களும், ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய், சாவச்சேரி, நல்லூர் என்று பல பிரதேசங்களில் ஜேவிபி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மானிப்பாய் மற்றும் சாவச்சேரி ஆகிய இடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டை எனக் கூறப்படுவது உண்டு. அங்கு, அனுரவின் ஜேவிபி கட்சி பின்தங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கையில் அங்கும் ஜேவிபி கட்சி முன்னிலை வகிக்கிறது. சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) அங்கு இரண்டாம் இடத்தில் உள்ளது.
யாழ்ப்பாணம் டிவிஷன் வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி 41.46% வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி 11.81% வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ் மாவட்டம் - யாழ்ப்பாணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,066 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 1,124 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி,
தேசிய மக்கள் சக்தி (NPP) 4,64,916 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 75,248
புதிய ஜனநாயக முன்னனி (NDF) 29,020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 23,235 வாக்குகளை பெற்றுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையில், கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications