மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு போலீஸ் சம்மன்! ஜூன் 12-ல் ஆஜராக உத்தரவு!!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்நாட்டு புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நமல் ராஜபக்சே வரும் 12-ந் தேதி நேரில் ஆஜராக சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன புதிய அதிபரானார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ராஜபக்சே ஆட்சிக் கால ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

Rajapaksa son Namal summoned by CID

ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். கோத்தபாய ராஜபக்சே எந்த நேரத்திலும் சிறையில் அடைக்கப்படலாம். அதேபோல் ராஜபக்சே மனைவி ஷிராந்தி மீதும் நிதி மோசடி புகார் கூறப்பட்டு அவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவை ஆஜராகுமாறு அந்நாட்டு சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 12-ந் தேதி நமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே, எதற்காக தமக்கு சம்மன் அனுப்பப்பட்டு எனத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+